பிரான்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு சாதனை நீச்சல்!


Image result for france swimmer lecomte


சாதனை நீச்சல்காரர்!


பிரெஞ்சு நீச்சல்வீரரான லெகோம்டே ஜப்பானிலிருந்து பசிஃபிக் கடல் வழியாக 9 ஆயிரம் கி.மீ பயணிக்க முடிவு செய்த முதல் நீச்சல்வீரர்.

தினசரி எட்டு மணிநேரம் பசிஃபிக் கடலில் நீந்தி 6 மாதங்களில் சான் ஃபிரான்சிஸ்கோவை அடைவதே லட்சியம். சுறாக்கள், ஜெல்லி மீன்களின் ஆபத்தை லெகோம்டே சந்திக்கவிருக்கிறார். "என் உடல் மற்றும் மனதில் எல்லையை நான் கடந்து பார்க்கவிரும்புகிறேன்" என பேட்டியளித்துள்ளார் லெகோம்டே. இவரின் உதவிக்காக வரும் படகில் சாப்பிட்டு படுத்துறங்கி பயணிப்பார்.

இவருக்கு இது ஒன்றும் புதிதல்ல; 1998 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலை கடந்து பிரான்சின் வறண்ட நிலப்பரப்பை அடைந்த சாகசமும் இவர் செய்துள்ளார். கடலில் லெகோம்டே பார்த்த பிளாஸ்டிக் குப்பைகள் திரும்ப கடலில் நீந்தவேகூடாது என முடிவெடுக்க வைக்க பயணத்தை முடித்தவர் கூறிய வார்த்தை Never Again என்பதுதான்.