Garfield 40!
முத்தாரம்
Mini
உங்களுக்கு திங்கட்கிழமை பிடிக்காதா?
திங்களை
நான் வெறுப்பதில்லை. தினசரி காலையை காபி, டூநட்டுடன் தொடங்குவது வழக்கம். திங்கட்கிழமை காலையில் மீட்டிங் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். அவ்வளவுதான்.
கார்பீல்டின் சோம்பேறித்தனம் மிகவும் பிரபலமானது. இந்த குணநலனை எப்படி உருவாக்கினீர்கள்?
நம்
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கார்பீல்டு கேரக்டர் உண்டு. டயட், தினசரி வேலைகளை சோம்பலாக செய்யும் மக்களின் பழக்கத்தை முன்வைத்தே அக்கேரக்டரை வடிவமைத்தேன். இன்று 200 மில்லியன் மக்கள் கார்பீல்டு காமிக்ஸை வாசிக்கிறார்கள்.
சோம்பேறி பூனை உங்களுக்கு 800 மில்லியன் டாலர்களை சம்பாரித்து கொடுத்திருக்கிறதே?
ஆம். கொழுத்த சோம்பேறி பூனையை பலரும் விரும்பாமல் இருக்கமுடியாது. என்னையும் என் குடும்பத்தையும் பராமரிப்பதே கார்பீல்டுதான். நான் என்னை கார்ட்டூனிஸ்ட் என்று கூறிக்கொள்வதையே இன்றும் விரும்புகிறேன்.
இவ்வாண்டை நினைவுபடுத்தும் விலங்கு என்ன?
மிகவும்
கஷ்டமான கேள்வி. கார்பீல்டாக இருந்தால் காலையில் தாமதாக எழுந்து டயட் உணவாக சாக்லெட் சாப்பிடுவதாகவும் வேலையை விட விடுமுறை நாட்கள் அதிகமாக இருக்கும்.
-ஜிம் டேவிஸ், கார்டூனிஸ்ட்.