உரிமைக்கு போராடுவது தேச துரோகமா?



Image result for iran arrest advocate nasrin


போராடுவது தேச துரோகம்!

இரானிலுள்ள கட்டாய ஹைஜப் தடையை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்திய பெண்களை பற்றிய பேசி குற்றத்திற்காக மனித உரிமை வழக்குரைஞர் நஸ்‌ரின் சோட்யூடெ கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணத்தை கூறாமல் நஸ்‌ரின் வீட்டில் அவரை கைது செய்த காவல்துறை, அவர்மீது தேசதுரோக குற்றச்சாட்டை பதிந்துள்ளது. டெஹ்ரான் எவின் சிறையில் 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டவருக்கு அதுகுறித்த தகவலே தெரிவிக்கப்படவில்லை. டிச. 2017 பெண்கள் ஹைஜப் அணிய அவசியமில்லை என்று கட்டாய சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதிப்போராட்டம் நஸ்‌ரின் மீதான தண்டனைக்கு முக்கிய காரணம். ஹைஜப்பை கழற்றி எறிந்து நடந்த அப்போராட்டத்தின் தலைவரான நஸ்‌ரின் செயலை புகழ்ந்து பத்திரிகைகள் புரட்சிகர மாற்றம் என எழுத மீது அரசின் பார்வை திரும்பியது. இரான் சட்டம் 638படி, பொதுஇடங்களில் ஹைஜப் அணியாமல் இருந்தால் இருமாத சிறைதண்டனை அல்லது 50 ஆயிரம் ரியால்வரை அபராதம் விதிக்கலாம். அரசு போராட்டக்கார பெண்கள் மீது அரசு தொடர்ந்த வழக்கில் பெண்களுக்கான வழக்குரைஞராக தண்டனையிலிருந்து மீட்க நஸ்‌ரின் போராடிவந்தார். நஸ்‌ரினை மீட்கவும் சுதந்திர சிந்தனையாளர்கள் எவின் சிறைக்கு வெளியே போராடி வருகின்றனர்.   



பிரபலமான இடுகைகள்