ஆண்களுக்கும் வந்துவிட்டது கருத்தடை மருந்துகள்!




Image result for male birth control


ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அவசியம்!- பரபரக்கும் புதிய ஆராய்ச்சி




Image result for male birth control





எழுபது முதல் எண்பதுவரை இந்தியா முழுக்க குடும்பக்கட்டுப்பாடு காய்ச்சல் வேகமெடுக்க, இதில் ஆண்களைவிட பெண்களே பங்கெடுத்தனர். ஆனால் முழுமையாக கருத்தடை பயனளித்ததா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். அவசரகதியில் பல்வேறு பரிசுப்பொருட்களோடு சாதனைக்காக செய்யப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்களின் பக்கவிளைவுகள் பெண்களின் ஆயுள்வரை துரத்தின.
நவீனத்தில் கருத்தடை விஷயத்தில் ஆண்களும் பங்குகொள்ள தொடங்கியுள்ளனர்.

நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆண்களுக்கான கருத்தடை சாதனங்கள் ஆணுறை, வாச்டக்டமி உள்ளிட்டவையே. குடும்பக் கட்டுப்பாட்டை தானே ஏற்கும் பெண்களுக்கு காப்பர் டி, கப்கள் டஜன் கணக்கிலான முறைகளை பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகளினால் அவை கருத்தடைக்கான சிறந்தவழியாக உருவாகவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான கருத்தடை சாதனங்களாக மாத்திரைகள், உடலில் தடவும் ஜெல் மருந்துகள் என 2024 ஆம் ஆண்டில் இச்சந்தையின் மதிப்பு 1 பில்லியனாக எகிறும் என்கிறது Global Market Insights அமைப்பின் ஆய்வு.
ஆதியில் ஆண்களுக்கான ஆணுறை முதலில் விலங்குகளின் குடல்தசைகளால் உருவாக்கப்பட்டது. பின்னர் முதல் உலகப்போரின்போது முதன்முறையாக ஜெர்மனி வீரர்கள் ஆணுறையை சகஜமாகப் பயன்படுத்த தொடங்கினர். 1918 ஆம் ஆண்டில் அமெரிக்கா பால்வினை நோய்களைத் தடுக்க ஆணுறையை சட்டப்பூர்வமாக்கியது. அமெரிக்காவில் இன்று திட்டமிடாத கருத்தரிப்பின் விகிதம் 45%.
கருத்தடுப்பு மாத்திரை அமெரிக்காவில் 1960 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 18+ மேஜர் பெண்கள் அதனைப் பெறும் வாய்ப்பு, வரலாற்றையே மாற்றியது. அதேசமயம் 62 சதவிகித பெண்களுக்கு முழுமையான கருத்தரிப்பு தடையை இம்மருந்துகள் வழங்கவில்லை என்பதே உண்மை. உடல் எடை கூடுவது, மனநிலை மாற்றம், உடல் உறுப்புகளில் ரத்தம் கட்டுவது ஆகிய பிரச்னைகள் பெண்களின் ஆரோக்கியத்தை நொறுக்கின.
தற்போது பெண்களின் கருத்தடை பாரத்தை ஏற்க ஆண்கள் முன்வந்துள்ளது பெண்களுக்கு ஆசுவாசம் தரக்கூடும். தோளில் தடவும் ஜெல், தினசரி மாத்திரை தொடர்பான ஆய்வுகள் டெஸ்டோஸ்ரோன் அளவைக் குறைத்து கருத்தரித்தலை நம்பிக்கையூட்டும்படி தவிர்க்கின்றன.

வாஷிங்டனைச் சேர்ந்த சமையல்கலைஞர் டேனியல் டட்லி, 5 ஆண்டுகளாக ஜெல்,மாத்திரை,ஊசி என மூன்று கருத்தரிப்பு சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளார்.  "ஆண்களுக்கு குறைவான செலவில் கருத்தரிப்பை செய்யமுடியும்போது ஏன் பெண்களை கருத்தடைக்காக வற்புறுத்தவேண்டும்? இது அநீதி இல்லையா?" என்பதே டேனியலின் கருத்து. உலகளவில் 50 சதவிகித ஆண்கள் புதிய கருத்தடுப்பு முறைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
"ஆண்களுக்கான கருத்தடுப்பு ஆராய்ச்சியில் சமூகரீதியான புதிய மாற்றம் இது. இச்சோதனையில் தன்னார்வலர்களாக பங்கேற்க பல ஆண்கள் முன்வந்துள்ளனர்" என்கிறார் ஆராய்ச்சியாளர் மருத்துவர் ஸ்டெபானி பேஜ்.
நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்(NIH) மற்றும் பாப்புலேஷன் கவுன்சில் ஆகிய அமைப்புகள் உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஜெல் சோதனைகளை பிரமாண்டமாக நடத்த தொடங்கியுள்ளது. ஆறு நாடுகளிலுள்ள நானூறுக்கும் மேற்பட்ட தம்பதிகளை இதற்கெனவே தேர்ந்தெடுத்து ஜெல்லை உடலில் தடவி பரிசோதிக்கவுள்ளனர்.

ஜெல்லிலுள்ள செயற்கை வேதிப்பொருளான நெஸ்டோரோன், ஊசி மருந்தைவிட ரத்தத்தில் கலந்து டெஸ்டோஸ்ட்ரோனை கட்டுப்படுத்தி நம்பிக்கையான முடிவுகளைத் தந்துள்ளது. காண்டம், வாச்டக்டமி கடந்த மூன்றாவது முறையைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சியை அமெரிக்காவும் சீனாவும் 1970 ஆண்டு முதலாக தொடங்கி விட்டன. சீனா காட்டன் விதைகளிலிருந்து எடுத்த வேதிப்பொருளை பயன்படுத்தி உருவாக்கிய காஸிபோல் மாத்திரை, 8 ஆயிரம் பேர்களிடம் சோதித்து பார்த்தபோது விந்தணுக்களின் அளவை சிறப்பாக குறைத்தாலும் மருந்தின் வீரியம் குறைந்தபோதும் விந்தணுக்கள் தம் இயல்புக்கு மீளவில்லை. பக்கவிளைவுகள் அதிகரித்ததால் இந்த ஆராய்ச்சி கைவிடப்பட்டது.
கருத்தடை முறைகளைக் கையாளும் ஆண்களுக்கு பக்கவிளைவுகள் உண்டா? "மனஅழுத்தம், மனநிலை மாற்றத்தைப் பற்றி பெரிதுபடுத்துகிறார்கள். அவற்றின் அளவு சகித்துக்கொள்ளும் தன்மையுடையதுதான். இது பெண்களுக்கும் பொதுவான ஒன்றுதான்" என்கிறார் சிலியைச் சேர்ந்த ஆராய்ச்சி மருத்துவர் கேப்ரியலா நோ. கோடிக்கணக்கில் உருவாகும் விந்தணுக்களை கட்டுப்படுத்துவதும், மாதம்தோறும் உருவாகும் ஒரு கருமுட்டையை கட்டுப்படுத்துவதும் ஒரே மாதிரியல்ல என்பதை ஆராய்ச்சியாளர்களும் உணர்ந்தேயிருக்கிறார்கள்இந்தியாவில் RISUG எனும் விந்தணுவை கட்டுப்படுத்தும் புதிய ஊசிமருந்தை கண்டுபிடித்துள்ளனர். ஊசிமருந்திலுள்ள பாலிமர் ஜெல், விந்தணுக்குழாயிலுள்ள விந்தணுக்களை செயலிழக்க செய்து கருத்தடுப்பை செய்கிறது. இதனை அமெரிக்காவைச் சேர்ந்த பர்சிமஸ் பவுண்டேஷன் வாஸ்ஜெல் என்ற பெயரில் உருவாக்கி சோதனைகளை நடத்திவருகிறது. இதன் கருத்தடுப்பு சதவிகிதம் 98%.  ஆராய்ச்சிகளின் வெற்றி சதவிகிதத்தில் மாற்றம் இருந்தாலும் கருத்தடை முயற்சியில் ஆண்களின் பங்கும் பொறுப்பும் சமூகத்தில் பாலின இடைவெளியை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஆண்களுக்கும் கருத்தடை!
ஜெல்

செயற்கை வேதிப்பொருளைக் கொண்ட ஜெல்லை தினசரி தோளில் தடவினால் போதும். ரத்த ஒட்டத்தில் கலக்கும் வேதிப்பொருள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

மாத்திரை

பழைய முறை என்றாலும் நம்பிக்கையானது. ஆய்வுக்கு உட்பட்ட 83 ஆண்களுக்கு விந்தணு கட்டுப்படுத்தப்பட்டதோடு தீவிர பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

பாலிமர் ஜெல் ஊசி

98 சதவிகிதம் கருத்தடையை உறுதிசெய்யும் ஊசி மருந்து முறை. சோதனை முடிந்து அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது


-.அன்பரசு