ஆண்ட்ராய்ட் அப்டேட் தாமதமாவதன் காரணம்!




Image result for android update lack



ஆண்ட்ராய்டு அப்டேட் தாமதம் ஏன்?


உலகில் 94% ஆண்ட்ராய்டு போன்கள் இன்னும் வெர்ஷன் 7 இல் தேங்கி நிற்கின்றன அல்லது மேலும் பின்தங்கிய வெர்ஷன்களில் இயங்கிவருகின்றன என தகவல் தருகிறது. ஆண்ட்ராய்டு மேம்பாட்டுக்குழுவின் தகவல்தள அறிக்கை. சென்னையைச் சேர்ந்த ராகுலின் மோட்டோ எக்ஸ் போனில் ஆண்ட்ராய்ட் நூகட் இன்னும் இயங்கிவருகிறது. இந்த ஓஎஸ் அறிமுகமாகி 21 மாதங்கள் ஆனாலும் இன்னும் அப்டேட் ராகுலுக்கு கிடைக்கவில்லை.

கூகுள் புதிய ஆண்ட்ராய்ட் ஓஎஸ் வெளியிடும் அளவு போன் தயாரிப்பாளர்கள் ரெடியாகவில்லை என்பதே எதார்த்த நிலை. "கூகுள் ஓஎஸ் வெளியிடும் வேகத்தில் வன்பொருட்களை தயாரிப்பாளர்கள் தயாரிக்க தயாராகவில்லை என்பதே உண்மையான காரணம்" என்கிறார் சைபர்மீடியா ஆராய்ச்சியாளர் பிரபுராம். வாட்ஸ்அப், ஜிஞ்சர்பிரட் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இயங்காது என அண்மையில் அறிவித்துவிட்டது. Xiaomi’s MIUI, Asus’s ZenUI உள்ளிட்ட போன்களில் புதிய ஆண்ட்ராய்டின் சிறப்பம்சங்கள் எதையும் பயனர்கள் உணரமுடியாதது மேற்சொன்ன காரணங்களால்தான்.

பாதுகாப்பு பேட்ச் பைல்களை கூகுள் வெளியிட்டாலும் போனில் இவை இணைக்க முடியாத பிரச்னையால் ஆண்ட்ராய்ட் பல்வேறு சவால்களை எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கிறது.