இந்து உணவுகள் ரிடர்ன்!
இந்து
உணவுகள் ரிடர்ன்!
துபாயைச் சேர்ந்த
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்து உணவுகளை மீண்டும் தன் பயணிகளுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. "வாடிக்கையாளர்களின் எதிர்வினைகளை ஆராய்ந்து இந்து உணவுகளை மீண்டும் கஸ்டமர்களுக்கு
வழங்க முடிவு செய்துள்ளோம்" என எமிரேட்ஸ் இந்தியா நிறுவனம்
தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள
பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சைவ உணவு, ஜெயின்
உணவு, கோசர் உணவு, மாட்டிறைச்சி இல்லாத
அசைவ உணவு என மெனு ஆப்ஷன்களை எமிரேட்ஸ் உருவாக்கி பரிமாறி வருகிறது.
முன்பு இந்து மீல்ஸ்
ஆப்ஷன்களை நிறுத்தி வைத்த எமிரேட்ஸ், குவிந்த வாடிக்கையாளர்களின் புகார்களால்
தற்போது யூடர்ன் அடித்து இந்து உணவுகளை மீண்டும் வழங்கத்தொடங்கியுள்ளது. வெளிநாட்டு சேவைகளை வழங்கும் பன்னாட்டு விமானநிறுவனமான எமிரேட்ஸ் இந்தியா, சென்னை,ஹைதராபாத்,
கொச்சி, கொல்கத்தா, டெல்லி,
மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களை கவர் செய்து
இயங்கி வருகிறது.