உளவியல் மருந்துகள் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள்!
புத்தகம் புதுசு!
How to Change Your
Mind: The New Science of Psychedelics
by Michael Pollan
480 pages
Allen Lane
உளவியல் மருந்துகள்
உலகில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆராயும் நூல் இது. எல்எஸ்டி
1940 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு
பெருமளவு ஆறுதல் கிடைத்தது. மனதின் உளவியலை மாற்றும் எல்எஸ்டி,
சிலோசைபின், டிஎம்டி ஆகிய மருந்துகள் நோயாளிகளின்
மனநிலையில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆய்வு நோக்கில் ஆராய்ந்துள்ளார் ஆசிரியர்.
Tesla: Inventor of
the Modern
by Richard Munson
Hardcover, 320 pages
W. W. Norton Company
நிக்கோலா டெஸ்லா
ரேடியோ, ரோபாட், ரிமோட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றின் பிரம்மா.
கண்டுபிடிப்புகள் அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யத் தெரியாததால் உலகம்
டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை அவர் இறந்த பின்னரே அறிந்தது. செல்போன்,
லேசர்ஒளி, இணையம் உள்ளிட்டவற்றின் ஐடியாக்களை முன்னமே
உருவாக்கிவிட்டார் டெஸ்லா. மழைநாளில் பிறந்தது முதல் நியூயார்க்
ஹோட்டலில் இறக்கும்வரை டெஸ்லாவின் வாழ்வை பதிவுசெய்யும் சுயசரித நூல் இது.
nt-size:13.5pt;font-family:"Ubuntu","serif";color:#333333'>