லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் - பிட்ஸ்!







லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங்!

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஜாஸ் இசைக்கலைஞர் லூயி ஆர்ம்ஸ்ட்ராங் பற்றிய சில சுவாரசியங்கள்.

பிறந்தநாளை கேட்பவர்களுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் தரும் ஒரே பதில், ஜூலை 4, 1900, ஆனால் நியூ ஆர்லியன்ஸ் சர்ச்சில் லூயிஸின் பிறந்தநாள் 1901 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 என்று பதிவாகியுள்ளது. ராணுவ இசைக்குழுவில் சேர்வதற்காக பொய் கூறியிருக்கலாம் என கிசுகிசுக்கிறது நெருங்கிய வட்டாரம்.

இத்தாலிய, சைனீஸ் உணவுகள் பிடிக்கும் என்றாலும் லூயிஸ் மிகவும் விரும்பிய உணவு அரிசியும் பீன்ஸ்களும்தான். தான் எழுதும் கடிதங்கள் கூட கையெழுத்து போடும் முன்பு Red Beans and Ricely Yours என்று எழுதுவது ஆர்ம்ஸ்ட்ராங் டச்.

சிறுவயதில் பல்வேறு வேலைகளை பார்த்து வாழ்க்கையை ஓட்டிய ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு Karnofskys என்ற யூதக்குடும்பம் பண உதவிகளைத் தாண்டி இரவு உணவுகளை அளித்து உதவியதை தன் ஆயுள் இறுதிவரை மறக்காத ஆர்ம்ஸ்ட்ராங் யூதமத சின்னமான நட்சத்திரத்தை அக்குடும்பத்திற்கு நன்றி பாராட்டினார்.  

பனிப்போர் காலகட்டமான 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லினில் கான்செர்ட் நடத்தி பாராட்டு பெற்றார். சிஐஏ பணம் கொடுத்து நடத்தியது என இதில் சர்ச்சையும் உண்டு. 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் கான்செர்ட் நடத்த முயற்சித்து ஈடேறாதது ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு வேதனை நிகழ்வு.


பிரபலமான இடுகைகள்