விண்வெளியில் பேனா பெஸ்ட் ஏன்?







பேனாவா? பென்சிலா? - எது பெஸ்ட்?

இரண்டுமே எழுதுவதற்குத்தான். ஆனால் விண்வெளியில் எந்த ஐடியா ஓகேவாகும் என்பதுதான் கேள்வி. ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில் எழுதும் பேனாவைக் கண்டுபிடிக்க அமெரிக்கா கோடிக்கணக்கில் செலவு செய்தது. என்ன காரணம்?

விண்வெளிக்கு பென்சில் பொருந்தாது. மரத்தில் செய்யப்பட்டிருப்பதால் ஆக்சிஜன் நிறைந்த கேப்சூலில் உயர் அழுத்தத்தில் தீப்பற்ற வாய்ப்பு உள்ளதோடு, கிராபைட் உடைந்து ஏற்படும் குப்பை பிரச்னையும் உண்டு. சிறிய விஷயம் என்றாலும் விண்வெளியில் இது தலைபோகிற விஷயம்தான். 1965 ஆம் ஆண்டு 128 டாலர்கள் விலையில் விண்வெளிக்கென உருவாக்கப்பட்ட பென்சில்கள் பலரையும் ஈர்க்கவில்லை. விண்வெளிக்கான பேனாவை ஃபிஷர் பேனா நிறுவனத்தின் பால்ஃபிஷர் உருவாக்கினார். ஈர்ப்புவிசையை சாராமல் நைட்ரஜன் அழுத்தத்தில் பேனா எழுதும். நீரிலும் கூட இதன் மூலம் எழுதலாம். நாசா மற்றும் சோவியத் இரண்டு நிறுவனங்களும் ஒரு பேனா 2.39 டாலர்கள் என்ற விலையில் ஹோல்சேலில் வாங்கின. 1968 முதல் ஃபிஷர் நிறுவனம் நாசாவுடன் கூட்டணி அமைத்து இன்றுவரை பேனாக்களை தயாரித்து வருகிறது.


 



பிரபலமான இடுகைகள்