வீக்எண்ட் பிட்ஸ்!- செக்ஸூக்கு எக்சேஞ்ச் ஆஃபர்!
எக்சேஞ்ச் ஆஃபரில்
செக்ஸ்!
வால்மார்ட்டோ அமேசானோ
கூட இப்படி ஒரு ஆஃபரை அறிவிக்கவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கணித ஆசிரியர்
டீனேஜ் பெண்ணை கனியவைக்க ஐபோன் தருகிறேன் என்று கூறி சிக்கியுள்ளார்.
அமெரிக்காவின்
லாங் ஐலேண்டைச் சேர்ந்த எழுபது வயது கணித ஆசிரியர் ஜெய்ரோ இன்ஸ்வாஸ்திதான் டீனேஜ் பெண்ணுக்கு
ரூட் போட்ட ரோமியோ.
சென்ட்ரல் ஐஸ்லிப் பள்ளியில் பணியாற்றும் ஜெய்ரோ தன் வகுப்பறையிலுள்ள
இரு மாணவிகளை நைச்சியமாக அணுகி அவர்களின் நிர்வாண படங்களுக்கு பணமும், செக்ஸூக்கு ஒத்துழைத்தால் ஐபோனும் தருவதாக ஆசைகாட்டியுள்ளது என்கொயரியில் தெரியவந்துள்ளது.
மாணவி போலீசில் புகார் செய்ய, பள்ளி உடனே ஆசிரியர்
ஜெய்ரோவை சஸ்பெண்ட் செய்துள்ளது. "ஜெய்ரோ மாணவிகளின் பிகினி
போட்டோவுக்கு தலா 5 டாலர்களும், நிர்வாண
போட்டோக்களுக்கு 150 டாலர்களும் அளிப்பதாக பேரம் பேசியுள்ளார்"
என பேட்டியளித்துள்ளார் காவல்துறை கமிஷனர் ஜெரால்டைன் ஹார்ட்.
எழுபது வயதில் இவ்வளவு எனர்ஜியா?
ஆடிட்டர் திருடர்!
ஆடிட்டராக நடித்து
இந்தியாவிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களில் பணத்தை கொள்ளையடித்து வந்த அமேசிங் திருடர்
மாட்டியுள்ளார்.
டெல்லி கன்னாட்
பிளேசிலுள்ள ஷோரூமில் ஆடிட்டராக நடித்த அமித்குமார், நடிப்பில் சொதப்ப திருடிய
25 ஆயிரம் பணத்தோடு வகையாக சிக்கிக்கொண்டார். டிப்டாப்
உடையில் பிராண்டட் ஷோரூமுக்கு சென்று பிரபல கம்பெனி ஆடிட்டராக அறிமுகமாகும் அமித்,
காஸ்ட்லி மெட்டீரியல்களை மட்டும் பார்வையிடுவார். முதலாளி கவனம் திசைமாறும்போது, நைசாக கேஸ் கவுண்டரிலுள்ள
பணத்தை ஆட்டையைப் போடுவது அமித்தின் தொழில் சீக்ரெட். ஆனால் கன்னாட்பிளேசில்
சிசிடிவி கேமராவின் வழியே அமித் பணம் திருடுவதை கவனித்த கடை முதலாளி, துல்லியமாக அலாரத்தை அழுத்தி அமித்தை அலேக்காக அமுக்கி போலீசில் ஒப்படைத்துள்ளார்.
லாக்அப் விளாசலில் மும்பை, நொய்டா, ஃபரிதாபாத், ஜெய்ப்பூர், போபால்
ஆகிய இடங்களிலும் அமித், ஆடிட்டர் முத்திரை பதித்து பல லட்சங்களை
சுருட்டியுள்ளது தெரிவந்திருக்கிறது. டிப்டாப் டெக்னிக் சூப்பர்!