இந்திய ஆளுமைகள் 2018!


Dilip Prasanth






இந்திய ஆளுமைகள் 2018!


Image result for sharmila bhattacharya


சர்மிளா பட்டாச்சார்யா, அறிவியலாளர்

நாசாவின் நட்சத்திர விஞ்ஞானி. ஸ்டான்ஃபோர்டு, பிரின்ஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உயிரியல் முதுகலைப்பட்டங்களைப் பெற்ற சர்மிளாவின் பூர்விகம் கொல்கத்தா. விண்வெளிக்கு பழ ஈக்களை கொண்டு சென்று மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை அறியும் ஆராய்ச்சி இவருடையது. மனிதர்களின் டிஎன்ஏவில் 75 சதவிகிதம் ஒற்றுமை கொண்ட ஈக்களை கலிஃபோர்னியாவிலுள்ள நாசா ஆய்வகத்தில் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்தார் சர்மிளா. விமானி தந்தைக்கு மகளான சர்மிளாவுக்கு விமானியாவது லட்சியமாக இருந்தது. தற்போது அதனை பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருகிறார்.

ஷயாரோ பனோ, முத்தலாக் வழக்குதாரர்

இஸ்லாம் சமயத்தில் பெண்களை கடுமையாக பாதித்த முத்தலாக்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து தடுத்து நிறுத்திய போராளி. ஷயாரோ பனோவும் கணவரின் தலாக் அறிவிப்பை விரைவுத்தபாலில் பெற்று வாழ்க்கை இழந்தவர்தான். முதலில் வழக்கு தள்ளுபடியானாலும் விடாமுயற்சியோடு ஷயாரோ பனோ தொடர்ந்த வழக்கு ஆணாதிக்கத்தால் துயருற்ற பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு சட்டரீதியில் விடியல் தந்தது.

Image result for avani chaturvedi fighter pilot


அவானி சட்டர்ஜி, போர்விமானி

இந்திய ஆயுதப்படைகளில் பெண்களுக்கு சேர முன்னர் தடை இருந்தது. காலம் செய்த மாற்றத்தால் இன்று இந்திய விமானப்படையில் போர்விமானியாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சட்டர்ஜி கடந்த மார்ச் மாதம் பணியேற்றார். போர்விமானங்களை கையாளும் மூன்று பெண் விமானிகளில் அவானியும் ஒருவர்.

பிரான்சு, நிசாந்த் பட்னி, தொழில்முனைவோர்

ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரான்சு மற்றும் நிசாந்த பட்னி 2012 ஆம் ஆண்டு தொடங்கிய கல்ச்சர் அலே என்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 43 மில்லியன். இந்தி, சீன மொழி பேசுபவர்களும் எளிதாக ஆங்கிலம் கற்கவைப்பதுதான் பிரான்சு,நிசாந்தின் குறிக்கோள். 2014 ஆம் ஆண்டு தொடங்கிய ஹலோ இங்கிலீஷ் ஆப் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விப்ரோ, டோமினோ பீட்ஸா ஆகிய நிறுவன பணியாளர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சியும் அளித்துவருகின்றனர்.
Image result for prasoon joshi




பிரஸூன் ஜோஷி, பாடலாசிரியர், சென்சார்போர்டு தலைவர்

பஹ்லஜ் நிக்லானிக்குப் பிறகு சென்சார் போர்டின் தலைவரான பாடலாசிரியர் பிரஸூன் ஜோஸி, புகார்கள் வராமல் அதனை நடத்திச்செல்கிறார். விளம்பர உலகைச் சேர்ந்த பிரஸூன் ஜோஷியின் வருகையை பலரும் வரவேற்க அதற்கேற்ப பத்மாவத் திரைப்படத்தில் அதிக வெட்டுகளின்றி படத்தை வெளியிட செய்தார். பாஜக அரசின் பல்வேறு பிரசார நிகழ்ச்சிகளை டிசைன் செய்து நடத்திய அனுபவம் கொண்டவர் பிரஸூன் ஜோஷி.   



பிரபலமான இடுகைகள்