தவளை மேரேஜூக்கு சீப் கெஸ்ட் யாரு?



Image result for frog illustration




பிட்ஸ்!

தவளைக்கு மேரேஜ்!

மத்தியப்பிரதேசத்தில் மழை பெய்யக்கோரி இரண்டு தவளைகளுக்கு கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்தது.
விழாவை சிறப்பிக்க சீஃப் கெஸ்ட்டாக அமைச்சர் லலிதா யாதவ் வந்திருந்தது ஹைலைட் அம்சம். விவசாயிகளின் நலன்களுக்கான இக்கல்யாணத்தில் கலந்துகொண்டதாக பேட்டியளித்திருக்கிறார் அமைச்சர். .பி மக்களுக்காக ப்ரே பண்றோம்!

பாம்புடன் ஒரு போர்!

தாய்லாந்தில் பாம்பிடம் சிக்கி உயிருக்குப் போராடும் நாய் வீடியோ ஃபேஸ்புக்கில் மாஸ் ஹிட். நாயை இரையாக்க அதன் உடலைச் சுற்றிவளைக்கும் பாம்பை, சுற்றியுள்ள மனிதர்கள் அகற்றி நாயை காப்பாற்றும் திக் திக் காட்சிகளைக் கொண்ட வீடியோ அது. இறுதியில் பாம்பைக் கொன்று நாயை உயிருடன் மீட்டுவிட்டார்கள். வர்லாம் வா பைரவா!

சிசிடிவி திருடர்!

சீனாவின் ஷாங்காயிலுள்ள ஜியான்சு பகுதியில் ஆபீசுக்கு திருடவந்தார் மர்ம மனிதர். உள்ளே இருந்த சிசிடிவி கேமரா ஈர்க்க, அதை திருடி விற்காமல் தன் வீட்டில் பொருத்திவிட்டார். ஆனால் போலீஸ் திருடரை கேமராவும் காட்சியுமாக அரஸ்ட் செய்துவிட்டது. ஹவ்? கேமராவின் ஐபி அட்ரஸ் மாற்றாததால் திருடரின் ஆல் இன் ஆல் நடவடிக்கைகளும் கேமரா ஓனருக்கு டெலிகாஸ்ட் ஆனதுதான் காரணம்.

சமத்துவ யூனிஃபார்ம்!


கென்யாவின் ப்ரெண்ட்ஸ் பள்ளியின் முதல்வர் அலெக்ஸ் மைனா கரியுகி, மாணவர்களின் யூனிஃபார்மை அணிந்து பள்ளிக்கு வருகிறார். "மாணவர்களின் சீருடையில் என்னை பார்ப்பவர்கள் ஜோக்கராக நினைத்தாலும் இவ்வுடை மாணவர்களுடன் என்னை இணைக்கிறது. முதல்வர், மாணவர் வித்தியாசம் தெரிவதில்லை. மேலும் உடையின் தரத்தையும் சரிபார்க்கமுடிகிறது" என புதுமை பதில் தருகிறார் அலெக்ஸ். டீச்சர் நெ.1. நீங்கள்தான் சார்!

பிரபலமான இடுகைகள்