ஸ்காலர்ஷிப் வென்ற தலித் மாணவர்கள்!




Image result for scholarship


வெளிநாட்டு உதவித்தொகை வென்ற தலித் மாணவர்கள்!

இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் வரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும்  கல்வி உதவித்தொகைகளை பெறுவதில் மகாராஷ்டிரா மாநிலம் டாப்பில் உள்ளதுஅதிலும் தலித் மாணவர்கள் இதில் முன்னிலை வகிப்பது பெருமையான செய்தி.

தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை(NOS) திட்டத்தில் கிடைத்த 72 உதவித்தொகைகளில் நாற்பதை மகாராஷ்டிரா மாநிலம் தட்டிச்சென்றுள்ளது. தலா ஆறு கல்வி உதவித்தொகைகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளன. கடந்த மூன்று  ஆண்டுகளாக மகாராஷ்டிரா கல்வி உதவித்தொகைகளை ஈர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.


2016-17 காலகட்டத்தில் கிடைத்த 108 உதவித்தொகைகளில் 53 உதவித்தொகைகளை மகாராஷ்டிரா பெற்றது. மீதியுள்ள இடங்களை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை பகிர்ந்துகொண்டன. முனைவர் படிப்புகளுக்கான இடங்களிலும் தலித் மாணவர்கள் அதிகரிக்க காரணம், மாநில அரசும் தலித் மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை திட்டத்தை ஒத்த பிளான்களை மேற்கொண்டுவருவதுதான் காரணம் என அதிகாரிகள் வட்டாரம் தகவல் கூறுகிறது

பிரபலமான இடுகைகள்