மருத்துவத்தில் உள்ள தந்திரங்கள்!
மருத்துவ அரசியல்
கீழைக்காற்று
பல்வேறு மருத்துவக்கம்பெனிகள் எப்படி இந்தியர்களை மருத்துவச்சோதனைக்கு பயன்படுத்திக்கொள்கின்றன என்பதிலிருந்து எலும்புகளை விற்கும் மேற்கு வங்காள கம்பெனி சீக்ரெட் , காப்புரிமையை எப்படி கம்பெனிகள் மாற்றி ஏமாற்றுகின்றன என்பது வரை துல்லியமான விவரங்கள் வாசிக்கும்போது அதிர்ச்சியடைய வைக்கின்றன.
தலை விழுந்தால் எனக்கு வெற்றி பூ விழுந்தால் உனக்கு தோல்வி என்பதுபோல மருத்துவ சோதனைகளை திட்டமிட்டு டாக்டர்களை வளைத்து சரிக்கட்டி செய்யும் தந்திரங்கள் மிரள வைக்கின்றன.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பணத்தைக் கொட்டி தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்து லாபவெறிக்கு மக்களை பயன்படுத்தும் மருந்து வணிகம் பலரும் அறியாத ஒன்று. இதில் அரசு மருத்துவமனைகள் எளிய இலக்காகவது தற்செயலான ஒன்றல்ல.
-கோமாளிமேடை டீம்.