சோவியத் ரஷ்யா தயாரிப்புகள்!
சோவியத் தயாரிப்பு!
ATMOSFERA PORTABLE
TRANSISTOR RADIO // 1959-1961
சோவியத் ரஷ்யாவின்
முதல் ட்ரான்சிஸ்டர் ரேடியோ. ஐரோப்பா, அமெரிக்காவுக்கு
சென்று அங்குள்ள ரேடியோக்களை வாங்கி வந்த வடிவமைப்புத்துறை அதை அப்படியே நகலெடுத்த
தொழில்நுட்பங்களை வடிவமைத்தனர். ரேடியோ,கேமரா,கார்,ஸ்கூட்டர் என அனைத்துமே
இப்படித்தான் உருவாயின.
BELKA A50 (SQUIRREL)
COMPACT CAR PROJECT // 1955-1956
நான்கு பயணிகள்
பயணிக்கும் பெல்கா கார்,
தயாரிக்கப்பட்டதே ஐந்தே ஐந்து கார்கள்தான். அரசு
பியட்-600 காரை மறு உருவாக்கம் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டதே
காரணம். அக்காரை நகலெடுத்து உருவானதுதான் ZAZ-965 என்ற மாடல் கார்.
AVOS´KA STRING
SHOPPING BAG // 1950–1980s
பார்க்க மீன் பிடிக்கும்
வலை போன்றிருந்தாலும் இது பர்சேஸ் செய்த பொருட்களை எடுத்துச்செல்லும் பை. எளிதில்
பாக்கெட்டில் மடித்து வைத்து எடுத்துச்செல்லும் இந்த பை 1980 ஆம் ஆண்டு பாலீதின் பைகள் பரவலானவுடன் காணாமல் போயின. சுற்றுச்சூழல் பிரச்னைகளால் இனிமேல் பிரபலமாக வாய்ப்புள்ளது.
ANTON, MASHA, AND
GRIB NEVALYASHKA ROLY-POLY DOLLS // 1956-1970s
வாங்கா-ஸ்டாங்கா
என அழைக்கப்படும் இப்பொம்மைகளை தள்ளிவிட்டாலும் எழுந்து நிற்கும். இக்ருஸ்கா அறிவியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த இப்பொம்மைகளின் பெயர் ஆன்டன்,
மாஷா, கிரிப் நெவாலையாஸ்கா.