அரசு வளத்தை வீரர்கள் தவறாக பயன்படுத்துவதால்தான் வரி!




Image result for ashok khemka


முத்தாரம் Mini


Image result for ashok khemka


விளையாட்டு வீரர்கள் வருமானவரி கட்டிவரும் நிலையில் எதற்காக தனியாக 33% வரியை அரசுக்கு தரவேண்டும்?

அரசுக்கு வரி கட்டுவது அறக்கட்டளை செயல்பாடல்ல, குடிமகன்களின் கடமை. விளையாட்டு வீரர்கள் வணிகரீதியில் பெறும் வருமானத்தில் ஒரு பகுதியைத்தான் அரசு வரியாக கேட்கிறது. அரசின் பிறதுறை பணியாளர்களுக்கும் இதே விதிதான்.

வரி விதித்தால் விளையாட்டு வீரர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடாதா?

தேசத்தின் பெருமைக்காகவும் ஆர்வத்திற்காகவும் மட்டுமேவா வீரர்கள் விளையாடுகிறார்கள்? மாநில அரசின் வேலைவாய்ப்பை பெற்ற விளையாட்டு வீரர்களுக்கானது. வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை அரசின் சட்டம் பாதிக்காது.

பரிசும், அரசுவேலையும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க போதுமா?

சுசில்குமாரைத் தவிர வேறு எந்த வீரரும் இரண்டுமுறை ஒலிம்பிக்கில் மெடல் வெல்லவில்லை. ஒலிம்பிக்கில் தங்கமெடல் வென்றவருக்கு அரசு ஆறு கோடி ரூபாய் வழங்கியது. விளையாட்டு வீரர்களுக்கு அரசுவேலை,பணப்பரிசு மிக முக்கியமான ஒன்று. அரசு வளர்த்தெடுத்த விஜேந்தர்சிங், பணத்திற்காக தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளுக்கு சென்றுவிட்டார். அரசு வளங்களை தவறாக பயன்படுத்தும் இதுபோன்ற வீரர்களுக்காகவே அரசு ஏப்ரல் 30 அன்று புதிய சட்டத்தை அமுல்படுத்தியது.

-அசோக் கெம்கா, முதன்மைச்செயலர், ஹரியானா.


பிரபலமான இடுகைகள்