கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை தந்த கேடு!



Image result for sugar price in india

கசக்கும் சர்க்கரை!

2018 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத்தொகை
22 ஆயிரம் கோடி.

சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடம் வகிக்கிறது இந்தியா. 50 லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிராகிறது. இக்கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்க 530 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

2017 ஆம் ஆண்டு கரும்பு பயிரிடும் எண்ணிக்கை 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவ்வாண்டில் மட்டும் ஏழு மில்லியன் டன்கள் சர்க்கரை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்க்கரைக்கான தேவை 25 மில்லியன் டன்கள்(2018). உற்பத்தியான சர்க்கரையின் அளவு 32 மில்லியன் டன்கள்.
தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு தரும் சர்க்கரை விலை விவசாயிகளின் உற்பத்தி செலவைவிட மிக குறைவு

கடந்தாண்டு சர்க்கரையின் தோராய விலை(கி.கி) ரூ.37(2017), இவ்வாண்டில் சர்க்கரையின் தோராய விலை ரூ.26(2018).