அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை!
குடிநீர் போர்!
2020 ஆம் ஆண்டில் 21 இந்திய நகரங்களில் நீர்தட்டுப்பாடு ஏற்பட உள்ளதை நிதிஆயோக் அறிக்கை
தெரிவிக்கிறது. உலகெங்கும் சுகாதாரமான குடிநீர் இன்றி
இறப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் என காம்போசிட் வாட்டர்
மேனேஜ்மென்ட் இன்டெக்ஸ்(CWMI) அறிக்கை(ஜூன்14,2018)
தகவல் கூறுகிறது.
டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்
ஆகிய நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நீர்பற்றாக்குறையால்
தீவிரமாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்விளைவாக
2030 ஆம் ஆண்டில் 40% பேருக்கு நீர்
என்பதே கானல்நீராகிவிடும் அபாயம் உள்ளது. தற்போதே ஆந்திரா,
சத்தீஸ்கர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்
குடிநீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. 10-25 மி.மீ மழைநீர் 2002-2016 காலகட்டத்தில் குறைந்துள்ளது
இதற்கு முக்கியக்காரணம். நீர்தட்டுப்பாட்டால் இந்தியாவின்
உள்நாட்டு உற்பத்தி 6%(2050) பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
என்கிறது நிதி ஆயோக் அறிக்கை. குடிநீர் 70% கலப்படமடைந்து நீர்தர அட்டவணையில் 122 நாடுகளின்
வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம் 120.
உலகிலுள்ள நன்னீரில் அளவில் இந்தியாவிலுள்ளது 4% மட்டுமே. இதைக்கொண்டு 16% மக்கள்தொகையின்
குடிநீர்தேவையை சமாளிக்கும் சவால் எழுந்துள்ளது.