உடலின் மின்காந்த அலைகள் என்ன செய்யும்?







வைப்ரேஷன் முக்கியம் பாஸ்!

ஒருவரை வசீகரிப்பதில் மனிதரின் உடலிலிருந்து வரும் மின்காந்த அலைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது என்கிறார் கண்டுபிடிப்பாளர் ஸ்டேன்லி ஜங்லெய்ப்.

மனிதர்களின் உடலிலிருந்து வெளிப்படும் ஆராவை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ள ஸ்டேன்லி அதற்கு பேடன்டும் வாங்கிவிட்டார். "ஒரு இடத்தில் தனியாக ஒருவர் நிற்பதற்கும் கூட்டமாக நிற்பதற்கும் உள்ள வித்தியாசம், வைப்ரேஷன்தான்" எனும் ஸ்டேன்லி மன அழுத்தத்திற்கு தன்னுடைய கருவி உதவும் என வாதிடுகிறார்.

யூத இத்தாலிய பூர்விகம் கொண்ட ஸ்டேன்லி தலைமையிலான குழுவினர், இன்டெல் நிறுவனத்திற்காக முதன்முதலில் மென்பொருள் மூலம் இயங்கும் ஆடியோ சிந்தஸைசரை உருவாக்கி புகழ்பெற்றனர். இசையமைப்பாளர், தத்துவவியலாளராக செயல்படும் ஸ்டேன்லி அருகிலுள்ள மலைக்குன்றை கார்ப்பரேட் சக்திகளிடம் காப்பாற்றவும் தயங்கவில்லை. மனித உடலை ரேடியோவாக கருதும் ஸ்டேன்லி, அதிர்வுகள் மூலம் மன அழுத்த பிரச்னைகளை தீர்க்க முடியும் என தொடர்ச்சியாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பிரபலமான இடுகைகள்