அகதிகளை கண்காணிக்க டிஎன்ஏ டெஸ்ட!










அகதிகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட்!


அமெரிக்க நீதிமன்றம் அகதி பெற்றோர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்க காலக்கெடுவை விதித்துள்ளது. அதிபர் ட்ரம்ப், தனது “zero-tolerance” எனும் குடியுரிமை கொள்கையை அமுல்படுத்தி பெற்றோர்களையும், குழந்தைகளையும் தனி முகாமில் அடைத்து கடும் விமர்சனங்களை உலகெங்கும் சந்தித்துவருகிறார்.

5-17 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர்களை பெற்றோர்களிடம் சேர்க்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறை(HHS), குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து குடும்பத்துடன் சேர்க்க முடிவெடுத்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அஸார் கூறியுள்ளார்.


3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பிறப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து பெற்றோருடன் சேர்க்க நீதிமன்றத்தின் காலக்கெடு போதாது என்பது சுகாதாரத்துறை வாதம். "டிஎன்ஏ டெஸ்ட் என்பது தவறான முடிவு. அரசு குழந்தைகள் குறித்த இத்தகவல்களை சேகரித்து அவர்களை வாழ்க்கை முழுவதும் கண்காணிக்க திட்டமிடுகிறது. பிறந்து இருமாதமான குழந்தைகள் உட்பட அப்பாவி குழந்தைகளுக்கு இந்த உண்மை ஏதும் தெரியாது" என்கிறார் அகதிகளுக்கான கல்வி மையத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் ஃபால்கன்