இடுகைகள்

அஞ்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகமே வேண்டும் என அத்தனைக்கும் ஆசைப்படும் அஞ்சல் ஊழியரின் வாழ்க்கைப்பாடு! - அஞ்சல் நிலையம்

படம்
  அஞ்சல் நிலையம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழில் பாலகுமார் எதிர் வெளியீடு   சார்லஸ் புக்கோவ்ஸ்கி நன்றி- காமன்ஃபோக்ஸ்  ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க கவிஞரான சார்லஸ் எழுதியுள்ள நாவல்தான் அஞ்சல் நிலையம். இந்த நூல் அவரின் சுயசரிதை என கூறப்படுகிறது. நாவலின் இறுதிப்பகுதியை நீங்கள் படித்தால் அதை உணர்வீர்கள்.   நாவல் முழுக்க அஞ்சல் வேலை, அதிலுள்ள பிரச்னைகள், அதை எதிர்கொண்டு வேலை செய்யும் ஹென்றி சின்னஸ்கி என்ற ஊழியரின் செயல்பாடு, அவரின் மேலதிகாரிகள், சின்னஸ்கியின் பிற ஆர்வங்களான குதிரைப்பந்தயம், பெண்களை இஷ்டப்படி புணருவது என விவரிக்கப்பட்டுள்ளது. நூலை நீங்கள் சிரித்துக்கொண்டுதான் படிப்பீர்கள். அந்தளவு செய்யும் வேலையை , சந்திக்கிற மனிதர்களை   பகடி செய்கிறார் சார்லஸ். குறிப்பாக பணத்திற்காக வேலை செய்து அந்த வேலையே அவர்களது மனதை, உடலை   எப்படி உருக்குலைக்கிறது என்பதை வேடிக்கையான மொழியில் சொல்கிறார். நாவலின் அங்கத மொழி இல்லாதபோது நூல் சாதாரணமாகவே தோன்றும். அதிலும் அஞ்சலக வேலை, இடங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களை கடுமையாக அங்கதம் செய்திருக்கிறார். கூடவே, அலுவ

பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

படம்
  பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது.  இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி.  ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்ப்புலியின் தாக

நண்பர்கள் இறப்பைக் கண்ணில் பார்த்தும் கடமையில் தவறாமல் கடிதங்களை, மருந்துகளை வீடுகளுக்கு விநியோகித்த தபால்காரர்!

படம்
            அஞ்சல் வழியாக நம்பிக்கை ! பிரதீப் சாகு அஞ்சல்துறை ஊழியர் , மும்பை அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர் . 54 வயதாகும் சாகு , இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார் . திலக் நகர் , செம்பூர் , கோவண்டி , கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார் . அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு . ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது . மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார் . அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல் . இந்தியா போஸ்ட் நிறுவனம் , கிராம ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு . மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன . அரசின் நிதியுதவி , பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு