பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

 







பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது. 

இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி. 

ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்ப்புலியின் தாக்குதலுக்கு ஆட்பட்டிருப்பார். 

நாலுமுக்கு எஸ்டேட், கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு  வாழ்ந்துகொண்டு கடந்த 25 ஆண்டுகளாக மழை, வெயில், புயல் என எச்சூழலிலும் தனது பணியை இடையறாது செய்து வருகிறார் ராணி. தொடக்கத்தில் பணிக்கு சேர்ந்தபோது ராணியின் கணவர் துணைக்கு வந்துள்ளார். பிறகு, ராணியே பாதையைப் புரிந்துகொண்டுவிட்டார். போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். 1997ஆம் ஆண்டு கோதையார் தபால் நிலையத்தில் மாஸ்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். நாலுமுக்கு எஸ்டேட்டில் வீடு உள்ளதால், பணிக்கு சென்றபோது மழை வந்தால் அங்குள்ளவர்களே ராணியை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். 

தனது வேலை வழியாக பாத்திமா ராணி சொல்லுவது, நம்பிக்கையுடன் முயன்றால் சவால்களைக் கடந்து எந்த வேலையையும் செய்யலாம் என்பதைத்தான். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

ஸ்ரீமதி எம்




கருத்துகள்