தெரியுமா - உயிரி எரிபொருள்
pixabay |
உயிரி எரிபொருள்
உயிரி எரிபொருள், தாவரங்கள், பாசி, விலங்கின் கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரிம எரிபொருட்களில் மாசுபாடு அதிகம். உயிரி எரிபொருட்களில் மாசுபாடு குறைவு என்பதோடு அதனை எளிதாக புதுப்பிக்க முடியும். உயிரி எரிபொருளைத் தயாரிக்க, பாசி ஏற்ற இயற்கை ஆதாரம் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். சோளத்திலிருந்து எளிதாக உயிரி எரிபொருள் தயாரித்து வருகிறார்கள். இதற்கு, பயோ எத்தனால் என்று பெயர். அமெரிக்காவில் இம்முறையில் உயிரி எரிபொருளைத் தயாரிக்கிறார்கள்.
உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். சூரிய ஆற்றல், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாசி வளர்ச்சி பெறுகிறது. பாசியை அறுவடை செய்து அதிலிருந்து எரிபொருளை சுத்திகரித்து பெறுகிறார்கள். இதனை எரிவாயு,பெட்ரோல், டீசல் போல வாகனங்களில் பயன்படுத்தலாம். இதனை எரிக்கும்போது குறைந்தளவு கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும். இது சுழற்சியாக நடைபெறும். எரிபொருளின் தேவைக்காகவே பயிர்களை விளைவித்தால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார மற்றும் சூழலியலாளர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தகவல்
super science encyclopedia book
கருத்துகள்
கருத்துரையிடுக