ஆனந்த பஜார் பத்திரிகையின் பயணம்- நூற்றாண்டு கொண்டாடும் பத்திரிகை -2







அவீக் சர்க்கார், ஏபிபி குழுமம்,கொல்கத்தா












 அசோக்குமாரின் மூத்தமகன் அவீக். இவர் இங்கிலாந்தில் புகழ்பெற்ற  பத்திரிகையாளர் ஹெரால்ட் ஈவன்ஸிடம் வேலை செய்தார். ஹெரால்ட் ஈவன்ஸ், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் நாளிதழ்களில் ஆசிரியராக சாதித்தவர். இவர் காலத்தில்தான் அந்த நாளிதழ்களில் பல்வேறு புலனாய்வு செய்திக்கட்டுரைகள் வெளியாயின. பத்திரிகையும் மெல்ல வளர்ச்சி பெற்றது. பிறகு ரூபர்ட் முர்டோக் நிறுவனத்தை வாங்கியவுடன் ஈவன்ஸ் வெளியேற்றப்பட்டார். அவரிடம் பத்திரிக்கை வேலைகளைக் கற்றவர் அவீக் சர்க்கார். 

1983ஆம் ஆ ண்டு அசோக் குமார் திடீரென காலமானார்.  அவீக் சர்கார் தனது சகோதரர் அனுப்புடன் சேர்ந்து ஆனந்தபஜார் பத்திரிகையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். ஆனந்தபஜார் பத்திரிகை பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்திற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டது. பின்னாளில், இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நேருவின் கொள்கைகளை பின்பற்றியது. வங்கப்பிரிவினை சம்பவம் நடைபெற்றபோது, விடுதலைக்கு ஆதரவாக ஆனந்தபஜார் செயல்பட்டது.

 அப்போது வங்காளத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கை முதலிடத்தில் இருந்தது. கல்வி கற்றவர்கள் இந்த பத்திரிக்கையைத்தான் வாங்கி படித்தனர். இது வங்காளத்திலும் டெல்லியிலும் ஆங்கிலத்தில் வெளியானது. இப்போது இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தைனிக் ஸ்டேட்ஸ்மேன் என்ற பத்திரிக்கை வங்காளத்தில் வெளியாகிறது. வங்க மொழியில் வெளியானதால் போர்கால செய்திகளை ஆனந்தபஜாரில் நிறைய மக்கள் படித்தனர். அனைத்து வீடுகளிலும் படிக்கப்பட்ட பத்திரிகை என்ற பொருளில் இதனை ஹவுஸ்ஹோல்ட் நேம் என்று கூறினர். போர்ச்செய்திகளை பதிவு செய்து நாளிதழில் பிரசுரிக்கும் வேலையை செய்தவர், அவீக் சர்க்கார்தான்.  தைரியமும் துணிச்சலுமாக போர்செய்திகளை பதிவுசெய்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றது, ஆனந்தபஜார் பத்திரிகை. 

பிறகு தான் ஆங்கிலப் பத்திரிகைகளை தொடங்கிய செயல்பாடு நடந்தது. கூடவே இந்தி மக்களுக்காக ரவிவார் என்ற மாத இதழையும் தொடங்கினர். ஆங்கில பத்திரிகைகளை ஏனோதானோவென்று  நடத்தவில்லை. சிறந்த எழுத்து ஆளுமைகளை ஆசிரியர்களாக நியமித்தனர். இந்த வகையில் எம் ஜே அக்பர் - சண்டே , தி டெலிகிராப், டி என் நினன் - பிஸினஸ் ஸ்டாண்டர்ட், எஸ்பி சிங் - ரவிவார், குஷ்வந்த் சிங் - நியூடெல்லி. பின்னாளில் விளையாட்டுக்கென ஸ்போர்ட்ஸ்வேர்ல்ட் வார இதழ் தொடங்கப்பட்டது. இதனை ஆசிரியராக நிர்வாகம் செய்தவர், மன்சூர் அலிகான் பட்டோடி. பெண்களுக்கான பத்திரிகை சனந்தாவை அபர்ணா சென் நிர்வாகம் செய்தார். 

அனைத்து பத்திரிகைகளுக்கும் எடிட்டர் இன் சீஃப் அவீக் சர்க்கார்தான். ஆனால் செய்திகளின் தேர்வில் சுதந்திரம் இருந்தது. செய்திகள் நேர்த்தியாக வெளியாகின. 

ஆனந்தபஜார் பத்திரிகைதான் முதன்முதலாக பெங்குயின் பதிப்பகத்துடன் சேர்ந்து பெங்குயின் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையை பிஸினஸ் ஸ்டாண்டர்டுடன் இணைந்து செயல்பட வைத்தது என சில முன்னோடி திட்டங்களை செய்தனர். இதனால் இந்திய ஊடகத்துறையில் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்தன. டிவி சேனல்களை தொடங்கும்போது ஸ்டார் டிவியுடன் இணைந்தனர். இப்போது ஏபிபி குழும சேனல்கள் தனியாக இயங்குகின்றன. 

புதுமைகளை செய்துவந்தால் காலத்தோடு இணைந்து பயணித்தால் ஏபிபி குழுமம் பல்வேறு சாதனைகளைச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. 

பிஸினஸ் ஸ்டாண்டர்ட்

ருத்ராங்சு முகர்ஜி






கருத்துகள்