புலிகளைப் பாதுகாக்கும் லத்திகா நாத்!
புலிகளின் பாதுகாப்பில் அணுகுமுறை மாறவேண்டும்!
சூழலியலாளர் லத்திகா நாத், புது டில்லியில் உள்ள அனைந்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர். கடந்த 30 ஆண்டுகளாக புலிகளைப் பற்றி ஆய்வுகளைச் செய்து வருகிறார். 1970ஆம் ஆண்டு தொடங்கி ஊடகங்களில் வனப் பாதுகாப்பு பற்றி பேசியும், எழுதியும் பங்களித்து வருகிறார்.
சிறுவயதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு காடுகளுக்கு பயணித்துள்ளார். தனது ஆறு வயதில் சூழலியலாளர் என்ற வார்த்தையைக் காதில் கேட்டார். அத்துறையில் வல்லுநராகவேண்டும் என்ற ஆசை அப்போதே மனதில் முளைவிட்டிருக்கிறது. இந்தியாவில் முனைவர் பட்டம் வென்ற முதல் பெண் உயிரியலாளர் லத்திகா நாத் தான்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக படித்து பட்டம் பெற்றார்.
பெண் என்பதால் கல்வி கற்றும் கூட பல நிறுவனங்களில் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே தனது ஆராய்ச்சிகளை சுயமாகவே முடிவு செய்து செய்யத் தொடங்கியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் கன்ஹா காட்டுப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்காக பணிகளை செய்தார். புலி, பனிச்சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார், யானை, டால்பின்கள் என பல்வேறு உயிரினங்களை புகைப்படமாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ”புலிகளின் வாழ்க்கையை புகைப்படமாக பதிவு செய்கிறேன். இதன்மூலம், அதன் பாதுகாப்பு பற்றிய பிரச்னைகளை மக்களிடம் நேரடியாக உரையாட முடியும்” என்றார் லத்திகா நாத்.
மனிதர்கள் விலங்குகள் ஆகியோருக்கு இடையிலான மோதலைத் தவிர்க்க உள்ளூர் பழங்குடி மக்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். வறுமையில் உள்ள பழங்குடியினருக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்க ஹைடன் இந்தியா (Hidden india)என்ற திட்டத்தை ஆதித்யாசிங் என்பவருடன் இணைந்து உருவாக்கி செயல்பட்டுவருகிறார். ”புலிகளின் பாதுகாப்பில் நமது அணுகுமுறை மாற்றம் பெற வேண்டும். இயற்கையில் அனைத்து விலங்குகளுக்கும் ஒரே விதமான அணுகுமுறை சரியாக இருக்காது. அனைத்து சூழல்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்றார் லத்திகா நாத்.
தகவல்
through the eye of the tiger
latika nath
HT 19.12.2021
கருத்துகள்
கருத்துரையிடுக