குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

 







எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை!

அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.  

நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும். 

பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர். 

அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் ஒலிக்கு வீஸ் ஹாங்க் (Wheeze Honk) என்று பெயர். இதன் ஒலி 1 கி.மீ. தூரத்திற்கும் அதிகமாக கேட்கும். மொசாம்பிக்கிலுள்ள மபுடோ எனும் பாதுகாக்கப்பட்ட காடுகளில் வாழும் நீர்யானைகளின் ஒலியை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். 

ஒலிக்கு நீர்யானை எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்பதை அறிய ஆராய்ச்சிகள் தீர்மானித்தனர். இதற்காக நீர்யானைகள் வரும் ஏரிக்கு அருகில் ஸ்பீக்கர்களை வைத்து அதில் , நீர்யானைகளின் பதிவு செய்த ஒலியை ஒலிக்க விட்டனர். தனக்கு அந்நியமான குழுவைச் சேர்ந்த நீர்யானைகளின் ஒலி கேட்கும்போது, அதற்கு நீர்யானைகள் உறுதியான முறையில் எதிர்வினையாற்றின. 

அந்நிய நீர்யானைகளின் ஒலியைக் கேட்டபோது, தனது மலத்தை வேகமாக விசிறியடித்தது. இதற்கு தனது எல்லையை உறுதி செய்யவே இப்படி செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தனது குழுவைச் சேர்ந்த நீர்யானைகளை விட, அந்நியர்களின் ஒலிக்கு  தீர்க்கமான முறையில் எதிர்வினை ஆற்றியதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதில் கிடைக்கும் தகவல்கள் முக்கியமானவை. இதன்மூலம்,  நீர்யானைகளை புதிய இடங்களுக்கு கொண்டு செல்வது, அவற்றைப் பாதுகாப்பது ஆகியவற்றை எளிதாக செய்யலாம்.  

தகவல்

The Week Junior

Secret of hippo calls revealed

The Week junior 5.2.2022

கருத்துகள்