சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

 







சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி! 


இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.

இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். 

புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம். 

சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத்திற்கு கீழுள்ள தொட்டிகளில் சேமித்துள்ள  நீரிலிருந்து அழுத்தப்பட்ட காற்று உருவாக்கப்படுகிறது. சூரியன் மறைந்தபிறகு, உருவாக்கிய சக்தி வாய்ந்த காற்றைப் பயன்படுத்தி டர்பைன்களை சுழலச்செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். இந்த செயல்பாடு காலையில் சூரியன் உதிக்கும்வரை தொடர்கிறது.  இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் ஆக்விண்ட்  (Augwind) என்ற தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இந்நிறுவனம், நீர்த்தொட்டிகளை ஸ்டீல் மற்றும் சிறப்பான பாலிமர் பொருட்களை பயன்படுத்தி குறைந்த விலையில் உருவாக்கியுள்ளனர். தொடக்கத்தில் ஆற்றலை சேமிக்க நீர் ஆற்றல், புவி ஈர்ப்புவிசையையும் பயன்படுத்தியுள்ளனர். மின்வாகனங்களில் பயன்படும் லித்தியம் பேட்டரிகளை உபயோகித்து ஆற்றலை ஹைட்ரஜன் போன்ற வேதிவடிவங்களில் சேமித்தும் உள்ளனர். ஆனால் இதில் நிறைய பாதகங்கள் உள்ளன. பேட்டரிகள், நச்சுத்தன்மை கொண்டவை என்பதோடு அதன் செயல்பாட்டு வரம்பும் குறுகியது. ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது அதிக பொருட்செலவு கூடியது. எனவே இவை நடைமுறைக்கு வரவில்லை. 

ஆக்விண்ட் நிறுவனம் அதிக காலம் உழைக்கும், ஆற்றலை சேமிக்கும் ஏர்பேட்டரியை (air battery) தயாரித்துள்ளது. சந்தையில் கிடைக்கும் பேட்டரிகளை ஒப்பிட்டால் திறன் சேமிக்கும் திறன் 80 சதவீதம் மட்டும்தான். ஆனால் பயன்படுத்தும் காலம் அதிகம். ஒரு கிலோவாட் மின்சாரத்திற்கான தோராய செலவை குறைக்க ஆக்விண்ட் நிறுவனம் குறைக்க முயன்றுவருகிறது.  எனவே, இனிமேல் புதுப்பிக்கும் ஆற்றலை தயாரிக்க தயங்கவேண்டியதில்லை.    


ஆதாரம் 

HT

Israeli firm uses air and water to store solar energy for night

15.12.2021

hindustan times school

 


கருத்துகள்