நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

 









மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்!




நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது. 

2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன. 

2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொருட்கள் கடுமையாக பாதிக்கின்றன என்பதை கடந்த ஆண்டு செய்த ஆய்விதழ் கட்டுரை (Environmental Toxicology and Chemistry) விவரித்தது. 

உலகளவில் ட்யூக் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை செய்தனர். பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றியது இந்த ஆராய்ச்சி. ஹூலா ஒன்  (Hoola one)என்ற கருவி, இயற்கையான பொருட்களிலிருந்து மைக்ரோபிளாஸ்டிக்குகளை சிறப்பாக அகற்றியது. இக்கருவியை ஹவாய் கடற்கரையில் சோதித்தனர். 

டென்மார்க்கின் ஆம்ஸ்டர்டாம் நகரில், ஆராய்ச்சியாளர்கள்  பபிள் பேரியர் எனும் கருவியை உருவாக்கினர். இதன், துளையிடப்பட்ட குழாய் வழியாக செல்லும் நீரில் உள்ள பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும்படி அமைத்தனர். காற்று அழுத்தம் மூலம் இக்கருவி செயல்பட்டது. கழிவுநீரிலுள்ள பிளாஸ்டிக் துகள்களை பாக்டீரியா பயோஃபிலிம் மூலம் இழுக்கும் ஐடியாவை, ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இக்கழிவுநீர்,  ஆறு, கடலில் விடப்படும் முன்னரே, பிளாஸ்டிக்குகள் நீக்கப்பட்டுவிடும். 

கார்பியோஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், குறிப்பிட்ட என்சைமை உருவாக்கி அதன் மூலம் பிளாஸ்டிக்குகளை நீரிலிருந்து அகற்றுகிறது. “கழிவுப்பொருள் என்பதற்கு மதிப்பு இருந்தால், அதனை மீண்டும் பொருளாக உருவாக்கலாம். இதன்மூலம் நிலங்களும், கடல்களும் மாசுபடாது” என்றார் இந்நிறுவன ஆராய்ச்சியாளரான  அலெய்ன் மார்ட்டி. தொழில்துறையினர் பயன்படுத்தும் பொருட்களில் தங்களது என்சைம்களை பயன்படுத்தினால், அதனை மீண்டும் பயன்படுத்தலாம்  என்கிறது கார்பியோஸ் நிறுவனம்.  

 தகவல்

discover jan feb 2022 magazine

the fight against microplastics (nancy averett)

Pinterest

கருத்துகள்