நோய்த்தொற்று கிருமிகளை எளிதாக அழிக்கும் தொழில்நுட்பம்!
வைரஸைக் கொல்லும் புதிய தொழில்நுட்பம்!
அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த தனியார் தியேட்டர் நிறுவனம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வரும் இந்தி சினிமா நடிகர் சல்மான்கான் ”தியேட்டர்களுக்கு செல்வது பாதுகாப்பானதா?” என்று கேட்பார். இதற்கு தியேட்டர் நிறுவனம் ”வைரஸ் நியூட்ரலைசர் ஒன்றை நிறுவியுள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள வைரஸ்களைக் கூட இக்கருவி கொல்லும்” என நம்பிக்கையுடன் கூற விளம்பரம் நிறைவடைகிறது.
தியேட்டர்களில் நிறுவப்பட்டுள்ள புதிய வைரஸ் நியூட்ரலைசர் கருவியை கேரளத்தைச் சேர்ந்த ஆல்அபவுட் இன்னோவேஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. கருவியின் செயல்பாட்டைப் பார்த்த 22 நாடுகளிலும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்தியன் ஏர்ஃபோர்ஸ், ஐக்கிய அரபு அமீரக மாளிகை, டிபி வேர்ல்டு, யுஎஃப்ஓ மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் ஆல் அபவுட் இன்னோவேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன.
தற்போது கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, 10 ஆயிரம் வைரஸ் பாதுகாப்பு கருவிகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இக்கருவிக்கு, வோல்ஃப் ஏர் மாஸ்க் என்று பெயர். இதனை மாநிலத்திலுள்ள பொது மருத்துவமனைகளில் நிறுவுவது கர்நாடக அரசின் திட்டமாகும். தொடங்கி பதினான்கு மாதங்களில் ஆல்அபவுட் இன்னோவேஷன் நிறுவனம், பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கிய நிறுவனம், 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே 100 கோடி ரூபாய் வணிகத்தை தொட்டுவிட்டது. நடப்பு ஆண்டில் 5 லட்சம் கருவிகளை விற்க உழைத்து வருகின்றனர். இதன் விலை 30 ஆயிரம் முதல் 1 லட்சம் ஆகும்.
ஆதாரம்
kerala startup virus neutraliser make waves
shine jacob
chennai 17
கருத்துகள்
கருத்துரையிடுக