தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பசுமைத் திட்டங்கள்!

 











பசுமை கொஞ்சும்  தமிழ்நாடு !

தமிழ்நாடு அரசு, அடுத்த பத்து ஆண்டுகளில்  265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பசுமை தமிழ்நாடு திட்டம் என பெயரிட்டுள்ளனர். இந்த வகையில் காடுகளின் பரப்பை  23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு 47 லட்சம் மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கினர். 

மண்ணுக்கான மரங்களை அறிந்து, அதன் மரக்கன்றுகளை நடுவதுதான் இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய காலங்களில் வேகமாக வளரும் மரங்களை அரசு தேர்ந்தெடுத்து வந்தது.  அரசு திட்டங்களை வேகமாக அறிவித்தாலும் இதனை செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. 13,500 ச.கி.மீ. அளவில் 265 கோடி மரக்கன்றுகளை நட்டு அதனை மரங்களாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதில், 4,500 ச.கி.மீ. பரப்பில் அரசு மரக்கன்றுகளை எளிதாக நடமுடியும். மீதியுள்ள பகுதிகள் தனியாருக்கு சொந்தம் என்பதால் திட்டத்தை நிறைவேற்ற அவர்களின் ஒப்புதலும் பங்கேற்பும் தேவை. கூடவே அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும் தேவைப்படும். 

“மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரித்து வளர்ப்பதும் வேறு வேறான பணிகள். அரசு நிலத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை நீர் விட்டு பராமரிப்பதில் நிறைய சவால்கள் உள்ளன” என்றார் தமிழ்நாடு பசுமைச் சூழல் நிறுவனம் எனும் அரசு நிறுவன உறுப்பினரான சேகர்குமார் நீரஜ். திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான வெற்றி, வனத்துக்குள் திருப்பூர் எனும் மரக்கன்று நடும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தற்போது, 12.5 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் மரங்களை திருப்பூரில் வளர்த்து பராமரித்து வருகின்றனர். இத்திட்டத்திலிருந்து தமிழக அரசு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டால் திட்டத்தை எளிதாக நிறைவேற்றலாம் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.  

தகவல்

TOI

Getting to root of afforestation plan (v.mayilvaganan)


 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்