இடுகைகள்

நோய்க்கிருமிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசி சதவீதம் வீழ்ச்சியுற்று வருகிறது!

படம்
தடுப்பூசிகள் ஆபத்தானவையா ? தடுப்பூசிகளில் நீர்த்துப்போன நுண்ணுயிரிகள், பாதி செயல்திறன் கொண்ட வைரஸ்கள், வேறு சில உயிரிகளின் நச்சுகள் இருக்கும். இவை உடலில் சென்றவுடன் நோய் எதிர்ப்பு சக்தி, இவற்றை எதிர்க்கும். இவை குழந்தையின் உடலில் நோய் வரும் முன்னரே செலுத்தப்படும். எதற்காக, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்காக. இதனை நாம் செய்யாதபோது, நோய் தாக்கினால் தாங்கும் சக்தி நமக்கு இருக்காது. சற்று நீர்த்த நிலையில் நோய்க்கிருமிகளைத்தான் நாம் தடுப்பூசியாக குழந்தைகளுக்குச் செலுத்துகிறோம். அவை நோய் பற்றிய நினைவை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகள் போலியோ, க க்குவான் இருமல், அம்மை போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க முடிகிறது. இங்கு நான் கூறுவது அறிவியல் பூர்வமான உண்மை. அதேசமயம் தடுப்பூசிகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளும் உண்டு. அனைவருக்கும் பொதுவாக மருந்து என்பது உலகில் கிடையாது. சில மருந்துகள் சிலருக்கு காய்ச்சலையும், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உயிரையும் கூட பறிக்கலாம். இன்றைய தகவல்படி உலகம் முழுவதும் சரியான தடுப்பூசிகள் போடப்படாமல் 30 லட்சம் குழந