இடுகைகள்

ராக்கெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியில் பேரரசைக் கட்டும் சீனா! - விண்வெளியில் சாதித்தது எப்படி?

படம்
    இடதுபுறத்தில் விஞ்ஞானி ஸூசென்   விண்வெளியில் பேரரசு – சீனாவின் லட்சியத்திட்டம்   2019 ஆம் ஆண்டு, சீனாவில் “வாண்டரிங் எர்த்” என்ற திரைப்படம் வெளியானது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், இணையத்தில் நெட்பிளிக்சிலும் கூட வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. படத்தின் கதை இதுதான். பூமியை சூரியக்குடும்பத்தில் இருந்து பிரித்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி கொண்டு சென்றால்தான், அழிந்த மக்கள் போக மீதியுள்ளவர்கள் உயிர்பிழைக்கமுடியும். இப்படி கொண்டு செல்ல பூமியை நகர்த்த வேண்டும். இதற்கென ஏராளமான எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதடையும் சூழலில், அதை சரிசெய்ய போராடும் அறிவியலாளர்களின் போராட்டத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி சீனப்படம் பேசுகிறது. அடிப்படையில் விண்வெளி சார்ந்த படம் என்றாலும், இதிலுள்ள முக்கிய நோக்கம் சீன அரசின் லட்சியத்தை உலகிற்கு கடத்துவதுதான். எனவேதான், சீன அரசின் சீனா ஃபிலிம் குரூப் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. சீன கல்வித்துறை வாண்டரிங் எர்த் படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட்டுக் காட்டுவதற்கு உத்த

இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்

படம்
                  பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன் ! மொகமது டெய்ப் மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம் , கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது . இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது . ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார் . பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் , மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து . இல்லை . பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார் . . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது . அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர் . மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட

இந்தியா தொழில்நுட்பத்தில் முந்துகிறதா?

படம்
தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் இந்தியா தன் சாட்டிலைட்டை தானே தகர்த்து, தொழில்நுட்ப ரீதியிலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் சீட்டையும் ரிசர்வ் செய்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல் பரப்பு 1000 கி.மீ. (தற்போது நடந்த தாக்குதல் 300 கி.மீ.பரப்பு) ரஷ்யா  600 கி.மீ. அமெரிக்கா 6000 கி.மீ. சீனா 10000 - 30000 கி.மீ. இருவகை சாட்டிலைட் ஏவுகணைகள் டாசாட்(DAASAT) இவ்வகை ஏவுகணையே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இன்டர்செப்டர் சிஸ்டம் உதவியின்றி வட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோளை அழிக்கும் சக்தி கொண்டது. வட்டப்பாதை ஏவுகணை இதனை முதலில் வட்டப்பாதையில் பொருத்தி பின்னர் செயற்கைக்கோளை நோக்கிச் செலுத்தி அதனை அழிப்பது. இதிலும் சீனாவை ஒப்பீடு செய்தால் இந்தியாவுக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான். காரணம், விண்வெளி குப்பைகளை லேசர் ஆயுதம் மூலம் அழிப்பது வரை யோசித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சீன விடுதலைப்படை. பூமியைச் சுற்றி 320 ராணுவச் செயற்கைக்கோள்கள் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதில் முந்துவது அமெரிக்கா. அமெரிக்கா 140 செயற்கைக்கோள்களையும், ரஷ்யா 80 செயற்கை