இடுகைகள்

நஷ்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுத்துறை நிறுவனம்!

படம்
  75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுநிறுவனம்! 1920ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு இயங்கியது.  1981ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பிரிட்டிஷ்  இந்தியா கார்ப்பரேஷனை தேசியமயமாக்கி உத்தரவிட்டார்.  1991ஆம் ஆண்டு, பிஐசிஎல் நிறுவனம் நலிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.  2001ஆம் ஆண்டு மத்திய அரசு, பிஐசிஎல் நிறுவனத்தை பல்வேறு சீர்திருத்தங்களால் மீட்க முடியவில்லை என்று அறிவித்தது.  2017ஆம் ஆண்டு, நிதி ஆயோக் அமைப்பு, நிறுவனத்தை மூடிவிடலாம் என ஆலோசனை தெரிவித்தது.  உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிவப்பு நிற கட்டிடத்தில் அமைந்திருந்த பிஐசிஎல் நிறுவனம், லால் இம்லி என்ற பிராண்டில் செல்லமாக அழைக்கப்பட்டது. கம்பளி தொடர்பான பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தது.  இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால், மான்செஸ்டர் ஆப் ஈஸ்ட் என வழங்கப்பட்டது.  சிறப்பெல்லாம் பழைய கதை. இப்போது நிறுவனத்தை மூடப்போகிறார்கள்.  தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் (NTC) என்ற நிறுவனத்தையும் பிஐசிஎல் நிறுவனத்தோடு சேர்த்து மூடுகிறார்கள். இந்த

செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

படம்
            செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம் ! செய்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம் , லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது . பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது . ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி , அதனை மூடியுள்ளார் . 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன . தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி , பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான் . ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம் . அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது . இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத

சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் நாளிதழ்களை படிக்கும்போது சில அரசு நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நிறுவனத்தின் பெயருக்கு கீழே நவரத்னா விருது பெற்றது என்று அச்சிட்டிருப்பார்கள். பல்வேறு நிறுவனங்கள், தங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக விருதுகளைப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அப்படி விருது பெற்றது என்று குறிப்பிடுவது எதற்கு என யோசித்திருக்கிறீர்களா? பொதுத்துறை நிறுவனங்களை இந்திய அரசு மூன்று பிரிவாக பிரிக்கிறது. மினிரத்னா, நவரத்னா, மகாரத்னா.  இவற்றை அவற்றின் மதிப்பு, வருமானம், பங்குச்சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில், செபி அமைப்பின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். மினிரத்னா மினி ரத்னா நிறுவனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. பிரிவு 1 இல் உள்ள நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பான லாபத்தைப் பெற்று இருக்கவேண்டும். அவை சார்ந்த தொழில்துறையில்  500 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கவேண்டும்.  பிரிவு 2 இல், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இலக்கிலான லாபத்தை பெற்றிருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் மினி

ஸ்மார்ட்மீட்டர் மின்சார சேவையை ஒழுங்குப்படுத்தும்!

படம்
2017ஆம்ஆண்டு இந்திய அரசு, ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. இதன்விளைவாக, எல்இடி விளக்குகளின் விலையை 80 சதவீதம் அளவுக்கு குறைத்தது. சாதாரண மின் மீட்டர்களை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.அது மின்கட்டணத்தை அளவிடுவதற்காக இருக்கும். ஸ்மார்ட் மீட்டர் உங்களது மின்பயன்பாடுகளை அளவிட்டு அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வோம். எதற்கு இப்படி சேகரிக்கவேண்டும் என கேள்விகள் எழலாம். மின்சார சேவைகளை வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மின்சார வீணடிப்பால் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனை தீர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் எனும் முயற்சி. இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர், சௌரப் குமார் இதுபற்றி பேசினார் இத்திட்டம் பற்றி விளக்குங்கள். நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை இந்தியாவிலுள்ள டில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய இடங்களில் நிறுவியுள்ளோம்.  நாங்கள் டில்லியில் மட்டும் பத்து லட்சம் மீட்டர்களை நிறுவியுள்ளோம். பீகாரில் இப்போதுதான் பணிகளைத் தொடங்கியுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நிறுவனங்கள் மூலம் மீட்டர்களை நிறுவி வருகிறோம். ஸ்மார்ட் மீட்