இடுகைகள்

எதிர்மறை மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனத்தை, ஊழியர்களை உடைத்து நொறுக்கும் எதிர்மறை மனிதர்கள், அவர்களின் உளவியல்

படம்
ஒருவரின் உளவியல் சார்ந்த இயல்பை எப்படி கணக்கிடுவது எப்படி? மேலேயுள்ள அனைத்து அத்தியாயங்களிலும் ஒருவர் நடந்துகொள்வதைப் பார்த்து மற்றொருவர்தான் அவரை சிகிச்சைக்கு தயார்படுத்துவதைப் பற்றி பேசியிருந்தோம். ஆனால் இதெல்லாம் சரி என்றாலும் மருத்துவரே ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிறழ்வு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பார்? மையர்ஸ் பிரிக்ஸ் டைப் இண்டிகேட்டர் என்ற அளவீடு இதற்கென பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதை எம்பிடிஐ என குறிப்பிடுகிறார்கள். இதை வைத்துத்தான் ஒருவரின் பாதிப்பு, குண இயல்பு, வரம்பு, வலிமை, பலவீனம் எல்லாவற்றையும் அடையாளம் காண்கிறார்கள்.  எம்பிடிஐ அளவீட்டை மருத்துவர்கள் இசபெல் மையர்ஸ் மற்றும் கேத்தரின் பிரிக்ஸ் ஆகியோர் உருவாக்கினர். இதற்கு கோட்பாடு அடிப்படையில் உதவியது, கார்ல் ஜங் என்பவர். உளவியல் ரீதியாக சிக்மண்ட் பிராய்டிற்கு பிறகு, கவனிக்கப்படும் உளவியல் வல்லுநர், கார்ல் ஜங்.  பிறரது பாராட்டுகள், வாழ்த்துகள் மூலம் ஆற்றல் பெற்று தன்னை வடிவமைத்துக் கொள்பவர் என்றால் அவர் வெளிவயமானவர். சிந்தனைகளை தனக்குள்ளேய உருவாக்கி அதன் வெளிப்பாடுகளை மட்டும் தேவைக்கு ஏற்ப வெளியில் பகிர்ந்துகொள்ளும் மனித