இடுகைகள்

பஞ்சாபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - மீனா கந்தசாமி, தில்ஜித் தோசன்ஜி, வினோத்குமார் சுக்லா

படம்
  கவிஞர் மீனா கந்தசாமி எழுத்தாளர் வினோத்குமார் சுக்லா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 தில்ஜித் தோசன்ஜி 39 பாடகர், எழுத்தாளர், பாடலாசிரியர் இன்ஸ்டாகிராமில் பதினைந்து மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள கலைஞன். பஞ்சாபி இசையை பிராண்டிங் செய்து உலகம் முழுக்க கொண்டு சென்றுவருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றபோது, மேடையில் பேசிய செயலாளர் ஆன்டனி பிலிங்கன், “”தோசன்ஜியின் பாடல்களுக்கு நாங்கள் நடனமாடிக்கொண்டு இருக்கிறோம்” என புகழ்ந்து பேசினார். கோச்செல் இசைவிழாவில் பஞ்சாபி மக்களின் உடைகளை அணிந்து கொண்டு பாடல்களை பாடி நடனமாடி அசத்தினார். இந்தி திரைப்பட உலகில் நிறைய படங்கள் நடித்தாலும் அவரை கவனிக்க வைத்தது உட்டா பஞ்சாப் என்ற படம்தான். இந்தி திரைப்படங்களைக் கடந்து தனியிசை பாடல்கள் மூலம் பெரிய கவனம் பெற்றவர், பஞ்சாபி மொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்கிறார். ஜூட் அந்தாணி ஜோசப் 40 திரைப்பட இயக்குநர், மலையாளம்.   2018 எவரி ஒன் இஸ் ஹீரோ என்ற படத்தை எடுத்தார் ஜோசப். இயற்கை பேரிடரை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் உலகளவில் குறைவு. இவரது படம், கேரளத்தில் மட்டுமே 200 கோடி

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை உருவானது எப்படி? - காலக்கோடு

படம்
  காலிஸ்தான் வரைபடம் காலிஸ்தான் தனி மாநிலமாக.. அதன் லோகோ காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை -காலக்கோடு 1920ஆம் ஆண்டு அகாலி தளம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி, பஞ்சாபி மக்களுக்கான தனி நாடு கோரிக்கையை உருவாக்கியது. இதற்காகவே பஞ்சாபி சுபா என்ற இயக்கம் உருவானது. 1966 பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு   பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களாக உருவானது. இதில் சில பகுதிகள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றது. சண்டிகர் நகர், மைய நகரமாக மத்திய அரசின் யூனியன் பிரதேச நகரமாக மாற்றப்பட்டது. 1969 அரசியல் தலைவர் ஜக்ஜித் சிங் சோகன் இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு சென்று காலிஸ்தான் நாட்டை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். 1973 அகாலி தளம் கட்சி, பஞ்சாப் மாநிலத்திற்கு சுயாட்சி கோரி ஆனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை (Anandpur sahib resolution) உருவாக்கியது. 1978 துறவி நிரான்காரி மிஷன் அமைப்பின் உறுப்பினர்களுக்கும், மரபான சீக்கியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பதினாறு பேர் கொல்லப்பட்டனர். ஜர்னைல்சிங் பிந்த்ரான்வாலேவை பஞ்சாபிற்கு கூட்டி வருவதற்கான கருத்தில் ஏற்பட்ட மோதலே, கொல

இந்தி, பஞ்சாபி, மலையாளத்தில் கலக்கும் புதிய(!) நடிகர்கள்!

படம்
  நடிகர், பாடகர் - தில்ஜித் தோசன்ஞ்சி அட்டகாசமான நடிகர் தில்ஜித் தோசன்ஞ்சி தில்ஜித் தோசன்ஞ்சி பஞ்சாபி மொழியில் முக்கியமான நடிகர். இப்போது இந்தி மொழி படங்களை, பஞ்சாப் மொழி படங்கள் வருகிறது என்றால் தள்ளி வைக்கும் அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறார்கள். சந்தைப்படுத்தலும் அப்படித்தான். பஞ்சாபி மொழியில் தில்ஜித் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் மழை பொழிந்தவை. இவர் பாடி நடிக்கும் பாடல்களும் அப்படித்தான். பஞ்சாபி பாடல்களை மேற்கத்திய பாணியில் பாடுவது இவரது சிறப்பு அம்சம்.  இந்திப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். இவர் நடித்த அர்ஜூன் பட்டியாலா, குட் நியூஸ் ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பிற்காக பேசப்பட்டவை. பஞ்சாபி மொழியில் நடித்த ராக் ஹவுஸ்லா என்ற படம் தியேட்டர் வசூல் மட்டுமே இப்போதைக்கு 54 கோடிக்கும் அதிகம். இன்னும் இப்படம் அமேசானில் திரையிடப்படவில்லை.  பிலாதூரில் பிறந்தவர் குருத்துவாராவில் உள்ள பஜனைகளைப் பாடி இசையைக் கற்றுக்கொண்டவர். 2011 ஆம் ஆண்டு தொடங்கி படங்களில் நடித்து வருகிறார்.  தில்ஜித்திற்கு பிராண்ட் நிறுவனங்களின் உடை என்றால் கொள்ளைப் பிரியம். வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைக்கா

காசைத் திருப்பிக் கொடுங்க ப்ரோ! - மேட்ரிமோனியல் காமெடி

படம்
டைம்ஸ்! திருமணங்களுக்கான சரியான வரன்களைத் தேடிக் கொடுப்பது முக்கியமான பணி. அதேசமயம் சரியாக அமைந்தால் மட்டுமே காசு  கிடைக்கும். இல்லையென்றால் அவமானமும், வசைபாடலும்தான் மிச்சம். பஞ்சாபின் மொகாலியில் சரியான வரன் பார்த்துக்கொடுக்காத கல்யாண ஏஜன்சி இழப்பீடு தரும் அவலத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன ஆச்சு.... நொரைன் என்ற டாக்டர் பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் புராஜெக்ட். அதில்தான் ஏஜன்சி சறுக்கியிருக்கிறது. 2017இல் இருந்து வரன் தேடி ஓய்ந்திருக்கிறது ஏஜென்சி. பணக்கார ர்கள் இல்லையா? 50 ஆயிரம் கட்டி ப்ரீமியமாக வரன் தேடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட நகரில் இருப்பவராக, ஜாட் சாதியைச் சேர்ந்தவராக, டாக்டராக இருக்கவேண்டும்  என்பதுதான் விதி. ஏஜன்சி கொடுத்த வரன்களை எல்லாம் ஊதித்தள்ளியிருக்கிறது பெண் தரப்பு. காரணங்களுக்கா பஞ்சம்? அப்புறம் பணத்தைக் கேட்டிருக்கிறது பெண் தரப்பு. பின்னே வேலை ஆகவில்லையே... பணம் தர முடியாது என நிறுவனம் சொல்ல நுகர்வோர் கோர்ட்டுக்கு படி ஏறியிருக்கிறது மருத்துவர் தரப்பு. கோர்ட் மனுவை பரிசீலித்து 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. இதெல்லாம்

சவுண்ட் அதிகம் சக்தி குறைவு - அர்ஜூன் பட்டியாலா

படம்
அர்ஜூன் பட்டியாலா - இந்தி இயக்குநர் - ரோஹித் ஜக்ராஜ் கதை - ரிதேஷ் ஷா, சந்தீப் லெய்ஷெல் ஒளிப்பதிவு - சுதீப் சென் குப்தா இசை - சச்சின் - ஜிகார் படம் பார்த்து சிரிப்பது ஒருவகை என்றால், படத்தில் நடித்தவர்களே பார்வையாளர்களுக்கும் சேர்த்து சிரித்து காமெடி செய்வது நம்மைக் கொல்வது இரண்டாம் வகை. அர்ஜூன் பட்டியாலா இரண்டாம் வகை. அவர்களே சிரிக்கிறார்கள். நாம் சேட்ஜியோடு சல்மான்கான் படத்திற்கும் போனது போல, அவர் சிரிக்கும்போது ஜோக் போல என்று  சிரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்த படத்தை எப்படி காசு போட்டு எடுத்தார்களோ? படத்தை தியேட்டரிலும் போட்டு  தைரியமாக படத்தில் டிக்கெட் கொடுத்து விற்பதை உண்மையில் மனசாட்சி உள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கு கீர்த்தி சனோனின் மெல்லிய வாழைத்தண்டு வழுவழு இடுப்பு மட்டுமே பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. மற்ற எதுவுமே.. அடிக்க வராதீர்கள்.  படத்தில் மற்ற விஷயங்கள் எதுவுமே உருப்படியாக இல்லை என்று சொல்ல வந்தேன். கதையின் முட்டைக்கரு: ஃபெரோஸ்பூர் நகரை குற்றங்களற்ற ஸ்வச் பாரத் ஆக்குவதே சப் இன்ஸ்ப