இடுகைகள்

இஸ்ரேல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீப்ஃபேக் வீடியோக்கள் ஏற்படுத்தும் பதற்றம்!

படம்
  சில மாதங்களுக்கு முன்னர் சினிமா நடிகையான ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோ என்றதும் ரெட் ட்யூப், ஜாவ் குரு போல இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம். கருப்பு நிற பனியன் அணிந்த பெண் லிஃப்டில் ஏறுகிறார். அவரின் மார்பகங்கள் வெளியே தெரியும்படியான உடை. அவர் வேறு யாருமல்ல ராஷ்மிகாதான். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும். அது தான் அல்ல என்று நடிகை சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை பதிவிட்டார்.  ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை பிறர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு அவர் குறிப்பிட்ட பணத்தைக்கூட கொடுக்க நேரிடலாம். இதெல்லாம் தொடர்புடைய நபர் சார்ந்த விஷயம். விவகாரம். இதில் பிறர் கருத்து கூற பெரிதாக ஏதுமில்லை. அனிமல் என்ற இந்தி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர்தான் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. அந்த படத்தில் ராஷ்மிகா, வாங்கிய காசுக்கு ஏற்ப நாயகனுடன் தெறமை காட்டியிருந்தார். அதைப் பார்த்தவர்கள் டீப்ஃபேக் வீடியோவே பரவாயில்லை என கமெண்ட் அடித்தனர். ஒருவரின் புகைப்படம், வீடியோவைப் பயன்படுத்த அனுமதி பெறுவது அவசியம். காப்புரிமை போன்றே இதை அணுக வேண்டும்.  க

இஸ்ரேலிய அரச பயங்கரவாதம், தேசியவாதத்திற்கு எதிராக நிற்கும் இயக்குநர் - நாடவ் லாபிட்

படம்
  கலக இயக்குநர்   இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாடவ் லாபிட். இப்படி அறிமுகப்படுத்துவதை விட விவேக் அக்னிகோத்ரி என வலதுசாரி இயக்குநர் எடுத்த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை குப்பை, வக்கிரம் என சொன்னவர் என்றால் எளிதாக புரியும். உலகத் திரைப்பட திருவிழாவில் தங்க மயிலுக்கான பரிசுப்போட்டியில் காஷ்மீர் ஃபைல்ஸ் எப்படி இடம்பெற்றது. வக்கிரமான குறிப்பிட நோக்கத்தை அடிப்படையாக கொண்டபடம் என வெளிப்படையாக விமர்சித்தார் இயக்குநர் நாடவ் லாபிட்.   உண்மையில் யூதர்கள் பற்றி இப்படியொரு படத்தை யாரேனும் எடுத்தால் கூட எனக்கும் பீதியாகிவிடும். உண்மையில் இது கௌரவமான செயல் அல்ல. முக்கியமான பிரச்னைகளை பேச வேண்டுமெனில் அதற்கான தன்மையில் இயல்பில்தான் பேசவேண்டும்.   47 வயதான சினிமா இயக்குநர் பாரிஸ் நகரில் வாழ்கிறார். ஒன்றை செய்வதை விட அதைப்பற்றி பேசுவது எளிது. அப்படித்தான் நிறையப் பேர் சொல்லுவார்கள். இஸ்ரேலிய இயக்குநரான நாடவ் எடுத்த சினானிம்ஸ் என்ற படம் 2019ஆம் ஆண்டு தங்க கரடி விருது வென்ற படமாகும். 2021இல் எடுத்த அஹெட்ஸ் நீ என்ற படம், கேன்ஸ் திரைப்பட விருதில் ஜூரிவிருதை வென்றது. இந்த படம் இஸ்ரேல் நாட்ட

சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

படம்
  சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி!  இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.  புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம்.  சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத

இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்

படம்
                  பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன் ! மொகமது டெய்ப் மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம் , கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது . இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது . ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார் . பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள் , மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து . இல்லை . பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார் . . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது . அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர் . மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட

எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது! - ரோன் மால்கா, இஸ்ரேலிய தூதர், இந்தியா

படம்
            ரோன் மால்கா இஸ்ரேல் தூதர் , இந்தியா     இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது . இதனை எப்படி அறிந்தீர்கள் ? எங்களது அமைப்பு மிகவும் வேகமாக தகவல்களை அறியக்கூடியது . அதனால் குண்டுவெடிப்பு நடந்தவுடனே அதிகாரிகளிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துவிட்டது . இப்படி நடந்திருப்பதால் நாங்கள் விழிப்புடனும் , அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகவே இருக்கிறோம் . கடந்த சில நாட்களாகவே நாங்கள் பல்வேறு மிரட்டல்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம் . இந்த வெடிகுண்டு மூலம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் யூகித்துவிட்டோம் . எனவே தேவையான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் உங்களுக்கு வந்த மிரட்டல்களை பற்றி சொன்னீர்கள் . அதனை விரிவாக சொல்ல முடியுமா ? இவையெல்லாம் இஸ்ரேல் தொடர்புடையதுதான் . நாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் . இதனால் ஈரான் அரசு , லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன . நாங்கள் எங்கள் எதிரிகளை குறை்த்து மதிப்பிடவில்லை . நாங்கள் இவற்றை தீவிரமாகவே அண

ராமானுஜன் இயந்திரம் - இஸ்ரேல் ஆய்வாளர்கள் சாதனை!

படம்
கணிதமேதை ராமானுஜனின் கணிதம், இன்று கணினித் துறைகளிலும் பயன்பட்டு வருகிறது. 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து தானாகவே கணிதத்தை பரிசோதனை செய்து அதில் சாதனைகளைச் செய்தவரை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்து அரவணைத்துக்கொண்டது. தற்போது அவரின் கணிதம் மூலமாக பை மற்றும் இ என்ற நிலை எண்களுக்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன. 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்வி கற்க சென்றார் ராமானுஜன். அங்கு அவருக்கு பேராசிரியர் ஹார்டி என்பவர் அறிமுகமானார். இவர் மூலமே ராமானுஜனின் பல்வேறு தியரங்கள் மக்களுக்கு அறிமுகமானது. ராமானுஜன் தானாகவே கற்று போட்ட பல்வேறு கணக்குகள் சரியானவை என்று பின்னர் உறுதியாயின. ஆனால் அவர் பிறரை ஒப்புக்கொள்ள வைக்கும் முறையை கடைபிடிக்கவில்லை என்கிறார் வார்விக் பல்கலையைச்சேர்ந்த ஆசிரியரான செலிமர். இதுபற்றி இஸ்ரேல் விஞ்ஞானிகள் ராமானுஜன் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவர்கள் செய்துள்ளது சோதனை கணிதம் என்ற முறையில் நல்ல முயற்சிதான். ஆனால் இது புதிதான யோசிக்கும் முறை அல்ல என்கிறார்  செலிமர். நன்றி: நியூ சயின்டிஸ்ட்

யூதர்கள் தொப்பி அணியக்கூடாது!

படம்
ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அவர்களை அடையாளம் காட்டும் தொப்பியை அணியவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. யூதர்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த விகிதம் 20 சதவீதமாக உள்ளது. எனவே யூதர்கள் பெரும்பாலான நேரங்கள் தங்கள் தொப்பியை அணியாமல் இருப்பது நல்லது என அரசு கமிஷனர் ஃபிளெக்ஸ் கிளெய்ன் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிரான வன்முறை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கருத்துக்கு 85 பேர் தீவிரமான பிரச்னை என கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் 2017 ஆம் ஆண்டு 37 ஆக இருந்த இந்த யூத தாக்குதல், 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு கமிஷனரின் கருத்தை ஜெர்மனிக்கான அமெரிக்க தூதர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். யூதர்களின் தொப்பியை அணிவது பிரச்னையா? அப்படியெனில் அந்த தொப்பியை நண்பர்களிடமிருந்து வாங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் கூறியுள்ளார். அரசு யூதர்களுக்கு எதிரான பிரச்னைகளை இப்போதேனும் உணர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறத

அமைதியைக் குலைத்த இஸ்ரேல் பிரதமரின் வெற்றி!

படம்
இஸ்ரேலின் நீண்டகால அதிபர்! வேறுயார்? பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி அப்படியொரு நாடே இல்லை என்று கூறிய பெஞ்சமின் நேடான்யாஹூதான் அவர். ஐந்தாவது முறையாக அதிபராகி சமாதானம் விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இதுபோல இந்தியாவிலும் மோடி வென்று வர வாய்ப்புள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி கன்ட்ஸைத் தோற்கடித்து பெஞ்சமின் நேடான்யாஹூ வென்றுள்ளார். பெஞ்சமின் மற்றும் அவரது சகாக்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும் அத்தனையிலும் மீண்டு ஊடகங்கள், நாட்டின் நீதித்துறைக்கு எதிராக பேரணி நடத்தி தேர்தலிலும் வென்று காட்டிவிட்டார். பெஞ்சமினின் வெற்றி, குறைந்தபட்சம் பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இருந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று நினைத்த நம்பிக்கையைக் கூட அழித்துவிட்டது என்று கருத்து சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ஈஹட் பாரக்கின் பிரதம செயலரான ஜில்லீடு ஷெர். நன்றி: டைம் இதழ்