இடுகைகள்

வனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரியாதையைக் கூட அழிக்கா

காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரங்களை இடம்பெயர்த்து நடும் கொலம்பிய வனத்துறை!

படம்
  காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழி - மரங்களை இடம்பெயர்த்து நடலாம்! உலக நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றன. இதனால், பருவகாலங்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர்,  கிரேக் ஓ நீல். இவரும் இவருடைய குழுவினரும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் உள்ள மரங்களை  வேறிடங்களுக்கு இடம்பெயர்த்து வருகின்றனர்.  முதல் பணியாக, ஒகனகன் பள்ளத்தாக்கு காடுகளிலுள்ள லார்ச், பைன், யெல்லோ செடார், ஹெம்ஸ்லாக் ஆகிய இன மரங்களைப் பிடுங்குகின்றனர். பிறகு இம்மரங்களை, அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியிலிருந்து கனடாவின் தெற்குப்புற யூகோன் எல்லை வரை நடுகின்றனர்.  ஒகனகன் பள்ளத்தாக்கு பகுதியில், காலநிலை மாற்ற பாதிப்பு தொடங்கியுள்ளது. இதனால்  நீர்பஞ்சம், கடும் பனிப்பொழிவு காரணமாக 1995-2015 வரையிலான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போயின. அதை தடுத்து மர இனங்களைப் பாதுகாக்கவே இடம்பெயர்த்து நடுகின்றனர். . மரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொல

காடுகள் அழிவதை மக்களுக்கு சொல்லவே படம் எடுத்தேன்! - அமித் வி மஸ்துர்கார்

படம்
                        அமித் வி மஸ்துர்கார் இந்தி திரைப்பட இயக்குநர்     ஒரு இயக்குநராக உங்களை எப்படி வரையறுப்பீர்கள் ? நான் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய இயக்குநர் கிடையாது . நான் திரைப்படம் உருவாகும் முறையை ரசித்து செய்கிறேன் . அதில் அனைத்துமே எனக்கு முக்கியம்தான் . எனக்கு படத்தின் கதைக்கரு பற்றி ஆராய்ச்சி செய்வது பிடிக்கும் . நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் . படத்தின் ஒளிப்பதிவு , இசை , படத்தொகுப்பு ஆகியவற்றை நான் விரும்பியே செய்கிறேன் . ஒரு படத்தை உருவாக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டே உருவாக்க நினைக்கிறேன் . திரைப்படம் என்பது காதலுடன் செய்யப்பட வேண்டியது அவசியம் . நியூட்டன் படத்தை உருவாக்கியபிறகு அடுத்து உடனே படம் செய்ய அழுத்தம் இருந்ததா ? ஆமாம் . நியூட்டன் படம் உருவாக்கி வெளியிட்டபிறகு ஓராண்டுக்குப் பிறகு அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டேன் . நிறைய பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வா்ய்ப்பு கிடைத்தது . ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லை . நா்ன் அடுத்து எடுக்கப்போகும் படம் ஆழமாக இருக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , வ