நாடக மேடையிலிருந்து உருவாகி வந்தவன் நான். அதுதான் என்னை திரைப்படத்திற்காக உந்தியது! - அனுராக் பாசு
anurag basu அனுராக் பாசு இந்தி திரைப்பட இயக்குநர் உங்கள் திரைப்படம் பொதுவாகவே பெரிய கேன்வாஸ் கொண்டதாகவே இருக்கிறதே? லூடோ அந்த வகையைச் சேர்ந்ததுதானா? பெரிய படங்களாக எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுப்பதில்லை. நான் கதையை எழுதும்போது அதனை காட்சிரீதியாக யோசித்து பார்ப்பேன். அப்படி பார்த்து பிட்டு கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சனையும், சட்டு பாத்திரத்திற்கு பங்கஜ் திரிபாதியையும் நடிக்க கேட்டு அணுகினேன். அவர்களும் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒகே சொல்லிவிட்டனர். சான்யா மல்கோத்ராவும், அபிஷேக் பச்சனும் நீங்கள் படத்தை இயக்கு வதால்தான் உள்ளே வந்தார்கள் என்று கூறப்படுகிறதே? நான் இதற்கு ஏதும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். செட்டில் நான் உருவாக்கும் சூழல் அப்படி அவர்களை யோசிக்க வைத்திருக்கலாம். நீங்கள் தொடக்கத்தில் டிவி தொடர்களை இயக்கியது திரைப்படங்களை இயக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறலாமா? டிவி என்று இல்லை. நான் நாடகத்திலிருந்து காட்சியை எப்படி ஒருங்கிணைக்கிறேன் என்று கற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்ற...