இடுகைகள்

இலினா சென் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்தீஸ்கர் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதத்தைக் கேள்வி கேட்ட சமூக செயல்பாட்டாளர்! - இலினா சென்

படம்
    சமூக செயல்பாட்டாளர் இலினா சென்         அஞ்சலி இலினா சென் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை கேள்வி கேட்ட செயல்பாட்டாளர் இவர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்லாண்டுகளை தங்கி வணிக சங்கங்களில் செயல்பட்டு வந்தார் . சமூக செயல்பாட்டாளர் , ஆசிரியர் எழுத்தாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு . அரசின் ஆதரவுப்படையாக சல்வா ஜூடும் என்ற படை அமைபப்பட்டு பழங்குடி மக்களை அச்சுறுத்தி வந்தது . இப்படை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கிக்கொடுத்த சமூக செயல்பாட்டாளர்களில் இவர் முக்கியமானவர் . இவரது கணவர் டாக்டர் பினாயக் சென் மீது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அரசு வழக்கு பதிந்துள்ளது . இலினா சென் , இன்சைடு சத்தீஸ்கர் - எ பொலிட்டிகம் மெமோர் , சுக்வாசின் - தி மைக்ரன்ட் வுமன் ஆப் சத்தீஸ்கர் என்ற நூல்களை எழுதியுள்ளார் . இவர் கடந்த 9.8.2020 அன்று கோல்கட்டாவில் புற்றுநோயாடு போராடி மரணமடைந்தார் . இந்தியன் எக்ஸ்பிரஸ்