சத்தீஸ்கர் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதத்தைக் கேள்வி கேட்ட சமூக செயல்பாட்டாளர்! - இலினா சென்

 

 

https://cdn.countercurrents.org/wp-content/uploads/2020/08/ilina-sen1.jpg
சமூக செயல்பாட்டாளர் இலினா சென்


 

 

 

 

அஞ்சலி

இலினா சென்


சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை கேள்வி கேட்ட செயல்பாட்டாளர் இவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்லாண்டுகளை தங்கி வணிக சங்கங்களில் செயல்பட்டு வந்தார். சமூக செயல்பாட்டாளர், ஆசிரியர் எழுத்தாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு.


அரசின் ஆதரவுப்படையாக சல்வா ஜூடும் என்ற படை அமைபப்பட்டு பழங்குடி மக்களை அச்சுறுத்தி வந்தது. இப்படை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கிக்கொடுத்த சமூக செயல்பாட்டாளர்களில் இவர் முக்கியமானவர். இவரது கணவர் டாக்டர் பினாயக் சென் மீது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அரசு வழக்கு பதிந்துள்ளது. இலினா சென், இன்சைடு சத்தீஸ்கர் - எ பொலிட்டிகம் மெமோர், சுக்வாசின் - தி மைக்ரன்ட் வுமன் ஆப் சத்தீஸ்கர் என்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 9.8.2020 அன்று கோல்கட்டாவில் புற்றுநோயாடு போராடி மரணமடைந்தார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்