புதிய கல்விக்கொள்கையில் உள்ள உருப்படியான அம்சங்கள் என்னென்ன? - ஜாலி அலசல்

 

 

 

 

புதிய கல்விக்கொள்கை 2020

 

 

 

 

புதிய கல்விக்கொள்கை 2020 கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மும்மொழிக் கொள்கையை பாஜக ஆதரவில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு நேரடியாக எதிர்க்கிறது. எப்போதும்போல பிற மத்திய அரசின் கல்வி சீர்திருத்தங்கள், தேர்வுகளை மறைமுகமாக ஆதரிப்பது போல இந்த நிலையும் மாறலாம். அனைத்து விஷயங்களுக்கும் பதவி, பணம், அதிகாரம் என மூன்று விஷயங்கள்தானே தீர்மானிக்கிறது.


இதில் உள்ள வேறு பல அம்சங்களைப் பார்ப்போம்.


மதிய உணவுத்திட்டம் ப்ரீ கேஜி, எல்கேஜி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியாதவர்கள் எப்படி தொலைதூரக்கல்வி வழியில் சில நாட்கள் மட்டும் அங்கீகாரம் பெற்ற மையங்களில் படித்து வந்தார்களோ, அம்முறை பள்ளிக்கும் அமலாகும். இதனால் விருப்பம் இருந்து கையில் காசும் இருந்தால் ஓடிஎல் எனும் தொலைதூர முறையில் பள்ளிப்படிப்பை படிக்கலாம். ஆறாவது முதல் எட்டாவது வகுப்பு வரையிலான காலகட்டத்தில் பத்து நாட்களுக்கு மேல் புத்தகப்பை சுமக்காமல் பள்ளி செல்ல லாம. பள்ளியில் அந்த காலத்தில் தச்சு வேலை, தோட்டக்கலை, மண்பானை செய்வது ஆகியவற்றை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.


பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சுயாட்சி பெற்று இயங்கி மாணவர்களுக்கு பட்டங்களை அளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கென தேவையான அம்சங்கள், தகுதிகள் உள்ளன. இவற்றுக்கு பொருந்தாத கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகலாம். ஆசிரயர் படிப்பு, ஆராய்ச்சிப்படிப்பு ஆகியவை இனி தீவிரமாக ஊக்குவிக்கப்படும்.


கணினி கோடிங் சார்ந்த படிப்பு இனிமேல் ஆறாவது வகுப்பிலிருந்தே தொடங்குகிறது. இதற்கு மாணவர்கள் தயாராக இருப்பது அவசியம்.


பள்ளிகளில் மூன்றாவது வகுப்பு, 5வது வகுப்பு, 8வது வகுப்பு ஆகியவற்றில் தேர்வு நடைபெறும். அடுத்து போர்டு நடத்தும் தேர்வு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் நடைபெறும்.


வழக்கொழிந்து போன சமஸ்கிருத மொழியை மாணவர்கள் தொடக்க கல்வி, உயர்கல்வி என எதிலும் படிக்கலாம். மும்மொழி கொள்கையிலும் இந்தி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் சமஸ்கிருதம் உண்டு.


எம்.பில் படிப்பு இனிமேல் கிடையாது. இளங்கலைப்பட்டம் படிப்பவர்கள் எப்போது படிப்பு போதுண்டா தாணுமலையானே என விரக்தி அடைந்தால் அப்போதே வெளியேறிவிடலாம். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு படித்தால் அதற்கும் சான்றித.ழ் உண்டு. இரண்டு ஆண்டு படித்தால் அதற்கு டி்ப்ளமோ கொடுக்கிறார்கள். பட்டப்படிப்பு நான்கு ஆண்டு. நீங்கள் மூன்று ஆண்டு படித்துவிட்டு கூட போதும் ப்ரோ என பிரின்சிபாலிடம் சொல்லிவிட்டு பிஸினஸ் தொடங்கலாம். வேலைக்கு போகலாம். வேறு உபயோகமாக நிறைய விஷயங்கள் உள்ளன. அதை செய்ய சுதந்திரம் உண்டு என்கிறது மத்திய கல்வித்துறை.


பள்ளி விடுமுறைக்காலத்தில் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் செய்ய அரசு அனுமதி தந்திருக்கிறார்கள். எனவே, மாணவர்கள் தாங்கள் வேலை செய்ய விரும்பும் துறையில் சென்று வேலை செய்யலாம். குழந்தை தொழிலாளர் என்று எல்லாம் தேச விரோதமாக பேசாதீர்கள். தொழில்திறன்தான் எதிர்காலத்தில் உங்களுக்கு சோறும் குழம்பும் போடும் என மத்திய அரசு திடமாக நம்பியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்