தொழிலதிபரின் மகனை மீட்க போராடும் பாடிகார்டுகள்! - சைகான் பாடிகார்ட்ஸ் 2016 கொரியா
சைகான் பாடிகார்ட்ஸ் 2016
Director:
Ken Ochiai
இரண்டு காமெடியான பாடிகார்ட்ஸ் சீரியசாக வேலைபார்த்து லீ மில்க் கம்பெனியின் புதிய இயக்குநராகும் இளைஞரை எப்படி எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.
இரண்டு பேர் நாயகர்களாக நடித்தால் என்னவிதமாக டெம்பிளேட்டை பயன்படுத்துவார்கள். ஒருவர் வேலையில் சீரியசாக இருப்பார். இன்னொருவர் அனைத்தையும் சொதப்பி வைத்தபடி பேசிக்கொண்டே இருப்பார்.
இந்த கதையிலும் அதேதான். சைகான் பாடிகார்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுபேர். வேலையில் ஆட்களை பாதுகாப்பதை விட போகும் இடமெல்லாம் கடைகளை, பார்களை உடைத்து அதற்கு கம்பெனியை பில் கட்ட வைப்பதுதான் வேலை, ஹாபி எல்லாமே. இந்த நிலையில் இவர்களையும் நம்பி லீ மில்க் என்ற கம்பெனி ஒனரின் இளம் வயது மகனை பாதுகாக்கும் அசைன்ட்மென்ட் வருகிறது. அதுவும் ஏஜெண்ட் ஒருவரின் தங்கை மூலம். அந்த தங்கையை அண்ணனின் நண்பராக மற்றொரு ஏஜெண்ட் கிலோகணக்கில் காதலிக்கிறார். இது போதாதா? கதையை நகர்த்த?
கொரிய படங்களில் பலமே, காமெடியோடு நெகிழ்ச்சியான சமாச்சாரங்களையும் சேர்த்து படத்தை நிறைவாக்குவதுதான். இப்படத்தில் ஏஜெண்ட் வேலையில் சொதப்பும் போதெல்லாம் சிறந்த பாடிகார்டாக சாதித்த தன் அப்பாவை நினைத்து குற்றவுணர்வு கொள்கிறார். மற்றொரு ஏஜெண்ட் பெண்களை நினைத்துக்கொள்கிறார். ஏன் என்று கேட்காதீர்கள். டிசைனே அப்படித்தான்.
படம் ஏறத்தாழ நட்பை பாராட்டி அதன் மேன்மையை பேசுகிறது.
படத்தின் கதை கடத்தல் அது இதுவென ரவுண்டானாவை பஸ் சுற்றுவது போல சுற்றினாலும் மையம் என்னவோ கார்ப்பரேட் ஊழல்தான். அதை குறைந்த நேரத்தில் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்து சொல்லியிருக்கிறார்கள். எனவே அதை பெரிதாக கண்டுகொள்ள ஏதுமில்லை.
சிரிக்க வைக்கும் பாடிகார்ட்ஸ்
கோமாளிமேடை டீம்
படம் எம்எக்ஸ் பிளேயரில் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக