400க்கும் மேற்பட்ட பிராண்டுகளை அறிமுகப்படுத்திய பெண்மணி! நந்தினி டயஸ், லோட்ஸ்டர் யுஎம் இந்தியா
நந்தினி டயஸ், லோட்ஸ்டர் யுஎம் இந்தியா |
இம்பேக்ட் 50! சாதனைப்பெண்கள்
நந்தினி டயஸ்
லோட்ஸ்டர் யுஎம் இந்தியா
நந்தினி லோட்ஸ்டர் யுஎம் இந்தியாவின் இயக்குநராக 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளை விளம்பரப்படுத்தி அதனை மக்கள் மனதில் பதியவைத்துள்ளார். அமுல், மகிந்திரா, டாடா, பிஎம்டபிள்யூ, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்காக விளம்பரங்களை உருவாக்கியுள்ளார். மேலும் எஃப்சிபி கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தை உருவாக்கி ஊடகங்களுக்கான முதலீடுகளைப் பெறும் வகையில் உழைத்தார். பிராண்டுகளுக்கான அனுபவம், பிரபலங்களுக்கான விளம்பர பணிகள் என பல்வேறு துறைகளில் நந்தினி வேலை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு தனது நிறுவனத்திற்கு சிறந்த நிறுவனம் என்ற பெயரை வாங்கிக்கொடுத்துள்ளார். மேலும், டைம்ஸ் பவர் வுமன், கேம் சேஞ்சர் ஆகிய விருதுகளைப் பெற்றார். கேன்ஸ், ஸ்பைக், ஃபோமா என பல்வேறு விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் லோட்ஸ்டர் யுஎம் இந்தியா நிறைய விளம்பரங்கள்ப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. 33 சதவீத வளர்ச்சி பெற்று சந்தையில் 10 சதவீத பங்களிப்பை பெற்றுள்ள நிறுவனம் இது.
கருத்துகள்
கருத்துரையிடுக