அரசியல் தளத்தில் இருந்தாலும் கண்ணியமாக நாகரிகமாக பேசிப்பழக வேண்டும்! -சச்சின் பைலட்

 

 

 

Rajasthan Congress's Poster Boy Sachin Pilot needs a ...
சச்சின் பைலட்

 

 

 

மொழிபெயர்ப்பு நேர்காணல்

சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

நீங்கள் கடந்த ஒரு வாரமாகவே ஜெய்ப்பூரில் இல்லை. உங்களது மீது ஆளும் அரசு புகார் செய்துள்ளதே?

அரசு செய்த புகாரை நாங்கள் கட்சி தலைமையிடம் கொண்டு சென்றோம்.அவர்கள் அதைக் குறித்து விசாரிப்பதற்கு முன்னரே மாநில அரசு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையை எடுக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் மீது சபாநாயகர் புகார் அளித்தார். பதவி நீக்க நடவடிக்கை வரை எடுக்கப்பட்டது.மாநில முதல்வர் கொண்ட கருத்துகளுக்கு மாற்று கருத்துகள் எம்எல்ஏக்களுக்கு இருந்தது. அதற்கு உடனடியாக கட்சிக்கு துரோகம் செய்தார், நாட்டிற்கு துரோகம் செய்தார் என்று கோஷங்கள், பேட்டிகள் அளிக்கப்பட்டன. இவையெல்லாம் இதற்கு தேவையில்லாதவை.
அந்த நேரத்திலும் கூட நான் கட்சிக்கு எதிராக, மாநில முதல்வருக்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. டில்லியில் பிரியங்கா, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினேன். மூன்று மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களோடு இணக்கமாக செல்ல சூழல் உந்துதல்தான் காரணமா?

பிரச்சினைகளை அமர்ந்து பேசி தீர்ப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு அளிக்காமல் ஒருவரை பதவியிலிருந்து விலக்குவது, எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து விலக்கி, பதவி இழப்பு வரை செல்வது சரியான தன்மையல்ல. இப்படி நடந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கான அனைத்து அம்சங்களையும் நிராகரிப்பது போன்றது.

முதல்வர் அசோக் கெலாட் உங்களைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார். அதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களிடம் முதல்வர் பேசியதைப் போல பேசிப்பாருங்கள். அடுத்த நாள் அவர் உங்கள் வீட்டுக்கு வேலைக்கு வரமாட்டார். அரசியல் தளத்தில் இருந்தாலும் கண்ணியமாக நாகரிகமாக பேசிப்பழக வேண்டும். இதனால்தான் நான் அவர் பேசியதற்கு மௌனத்தையே பதிலாக தந்தேன்.

கடந்த கால கசப்புகளை உங்களால் மறந்துவிட முடியுமா?

நான் ஜெய்ப்பூருக்கு காங்கிரஸ் கட்சி தலைவராக வந்த போது, 21 பேர்தான் கட்சிக்கு எம்எல்ஏக்களாக இருந்தனர். முன்னர் இருநூறு பேர் எம்எல்ஏக்களாக இருந்து இந்த சரிவு ஏற்பட்டிருந்தது. அசோக் கெலாட் முதல் வராக இருக்கும்போதுதான் இந்த நிலை ஏற்பட்டது. அவர் மாநில கட்சி தலைவராக, பிரதேச கமிட்டி தலைவராகவும் இல்லை. நான் இந்த பதவிகளில் கடினமாக உழைத்து நேர்மையான முறையில் முன்னேறி வந்தவன். ராகுல்காந்தி என்னை மாநில அரசில் துணை முதல்வராக அமர்த்தினார். நான் இந்த பதவி விவகாரம் சரியானது அல்ல. ஒத்துவராது என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே விஷயங்கள் நடந்துள்ளன.

முதல்வர் உங்களோடு ஒன்றரை ஆண்டுகளாக பேசவில்லை என்று கூறப்படுகிறதே?

அப்படி என்றால் அரசு எப்படி நடைபெற்றிருக்கும் என்று நீங்களை எண்ணிப்பாருங்கள். மாநில முதல்வர் அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டுத்தான் முடிவுகளை எடுக்கவேண்டும். இப்போது கட்சி கமிட்டி, அத்தகைய உறுதிமொழியைக் கூறியுள்ளது. இனிமேல் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

அரசு தலைமையை மாற்றக்கோரி காங்கிரஸ் தலைமையிடம் கூறினீர்களா?

நான் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்திக்க என்ன செய்யவேண்டுமோ அதற்கான விஷயங்களை காங்கிரஸ் கட்சியிடம் கூறியிருக்கிறேன். நான் தனிப்பட்ட யாரைப் பற்றியும் புகார்களைக் கூறவில்லை.

நீங்கள் அடுத்த முதல்வராகத்தான் ஆசைப்படுகிறீர்களா?

நான் மத்திய அரசில் அமைச்சராக இருந்துள்ளேன். இப்போது மாநில அரசில் துணை முதல்வராக இருக்கிறேன். எனக்கு முதல்வராகும் ஆசை இல்லை. இந்த பதவிகளை எனக்கு கிடைத்ததையே அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

தி வீக்

சோனி மிஸ்ரா




கருத்துகள்