நடிகராக இல்லை என்றால் வேலையே இல்லாத நடிகராக இருந்திருப்பேன்! அனுபம் கேர்

 

 

 

 

 

Anupam Kher resigns as FTII chairman, here's why ...
அனுபம் கேர்

 

 

 

 

அனுபம் கேர், இந்திமொழி நடிகர்


பொதுமுடக்க காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?


இக்காலத்தில் உங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவை. நீங்கள் விரும்புகிற உறவுகள், உணவுப்பொருட்கள், வைஃபை ஆகியவைதான் அவை.


நீங்கள் நடிகராக இல்லை என்றால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?


வேலையே இல்லாத நடிகராக இருந்திருப்பேன்.


நீங்கள் உங்களுக்கு ஆதர்சமாக நினைக்கும் நடிகர்களைக் குறிப்பிடுங்கள்


ராபர்ட் டி நீரோ, திலீப் குமார்.


உங்களுக்கு திரையில் சிறந்த மகனாக நடித்தவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?


1995ஆம் ஆண்டு என்னுடைய மகனாக ஷாருக்கான் நடித்தார்.


உங்கள் மகளாக நடித்த நடிகையரில் யார் பெஸ்ட்?


பூஜா பட், மந்தா நாகின், பர்மிந்தர் நாக்ரா


பத்து ரூபாய்க்கு குறைவாக நீங்கள் வாங்கிய பொருள்?


பார்லே ஜி பிஸ்கெட், வடாபாவ் ஆகியவற்றை வாங்கினேன்.


வடா பாவ் வாங்கிச்சாப்பிட உங்களுக்கு பிடித்த இடம் எது?


மெஹ்பூப் ஸ்டூடியோ கேண்டீன்.


இந்துஸ்தான் டைம்ஸ்




கருத்துகள்