இந்தியர்களுக்கு எப்போதுமே சாதி பிடிக்கும்! சேட்டன் பகத்
சேட்டன் பகத்
சேட்டன் பகத்
உங்களுடைய தி கேர்ள் இன் ரூம் நெ.105 என்ற நாவலில் கொலை செய்வதற்கான பகுதிகள் வருகின்றன. அதே போல அடுத்த நாவலான அரேஞ்சுடு மர்டரும் அப்படியே தொடர்கிறதே ஏன்?
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிப்பதை விட அவளை கொல்ல திட்டமிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் காதலை கடந்து க்ரைமுக்கு செல்கிறேன். சேட்டன் பகத்தின் நாவலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் காமெடி, காதல், இந்திய சமாச்சாரங்கள் அனைத்துமே இருக்கும்.
நீங்கள் ஒருமுறை என்ஆர்சி மசோதாவை, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களோடு ஒப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் இப்படி அரசியல் நிலை எடுத்து பேசுவது உங்கள் ரசிகர்களை பாதிக்குமா?
நான் என்னை எழுத்தாளராக நிரூபித்துவிட்டேன். இப்போது எனக்கு சில விஷயங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. எனவே, நான் அதனை அவர்களுக்கு நூல் வழியாக சொல்லுகிறேன். அவர்கள் என் எழுத்தைப் புரிந்துகொண்டால் இதனை ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
இன்று பரபரப்பாக இந்தியாவில் பேசப்படும் நெபோடிசம் பற்றி முன்னமே நீங்கள் பேசியிருந்தீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்
நான் ஒரு எழுத்தாளராக நீங்கள் கூறும் சாதி, மேல்தட்டுவர்க்க கட்டுமானங்களை உடைத்தெறிய நினைக்ககிறேன். இந்தியர்களுக்கு எப்போதுமே சாதி கட்டுமானங்களை அனைத்து விஷயங்களிலும் ஏற்படுத்துவது பிடிக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய வெற்றியாளராக இருந்தாலும் பிராமணர்களின் அடுக்குக்கு இணையாகவே முடியாது. சுசாந்த் சிங் விவகாரத்தில் நடைபெற்றதும் அதுதான். நெப்போடிசம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். அதையே அன்றும் சொன்னேன்.
நீங்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறீர்கள். இன்று நீங்கள் புகழ்பெற்றிருப்பதால் கேலி, கிண்டல்கள் குறைந்துள்ளதாக நினைக்கிறீர்களா?
சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இறந்தபிறகு இனிமேலும் தானாகவே தன்னை உழைத்து உயர்த்திக்கொண்டவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. என்னுடைய புதிய நூல் வெளியாகி இருக்கிறது. நான் இன்னும் கேலி, கிண்டல்களுக்கு இலக்காகமல் இருக்கிறேன். மேல்தட்டுவர்க்கம் இன்று கள்ளமௌனத்துடன் இருக்கிறது. அவர் ஊடகங்களில் கடுமையாக விமர்சனங்கள், கேலி, கிண்டல் செய்யப்பட்டதனால்தான் சுசாந்தின் மனநிலை பாதிப்பு அடைந்தது
இந்தியா டுடே
சிரிவஸ்தவா நெவேடியா
சேட்டன் பகத், சாதி, சுஷாந்த்சிங், தற்கொலை, கேலி கிண்டல், இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக