கூகுளின் புதிய சமூக வலைத்தளம் கீன்! - பின்டிரெஸ்ட் வலைத்தளத்தை வீழ்த்த புதிய வியூகம்
கீன் |
கூகுளின் புதிய சமூக வலைத்தளம் கீன்
ஸ்டே கீன் என்ற வலைத்தளத்திற்கு சென்றிருக்கிறீர்களா? வாய்ப்பிருந்தால் சென்று பாருங்கள். இப்போது ஃபேஸ்புக் பெரும்பாலும் மக்கள் கூடும் இடமாக உள்ளது. அதைத்தாண்டியும் எதிர்பார்ப்பவர்களுக்கு ட்விட்டர், இன்ஸ்டாகிரம் உள்ளது. அதிலிருந்து பல்வேறு கலை, திரைப்படம் சார்ந்த எதிர்பார்ப்பவர்களின் விருப்பங்களை பின்டிரெஸ்ட் வலைத்தளம் தீர்த்துவைக்கிறது. இப்போது அதற்கு போட்டியாக கூகுள் கீன் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த வலைத்தளம் முழுக்க கூகுளின் தேடுதல் அல்காரிதம் கொண்டு செயல்படுகிறது. இதில் உங்களுக்கு விருப்பமான வடிவமைப்பு கலைஞர்கள், இசை, திரைப்படங்கள் சார்ந்து தேடல்களைச் செய்யலாம். உங்களுடைய பக்க ங்களை உங்கள் விருப்பம் சார்ந்தே வடிவமைக்கலாம்.
பின்டிரெஸ்டைப் போலவே அதன் ஐடியாவைப் பின்பற்றி நிறைய வலைத்தளங்கள் வந்துவிட்டன. ஆனாலும் பின்டிரெஸ்ட் அவற்றின் போட்டியை சமாளித்து நம்பர் 1 ஆக உள்ளது. காரணம், இதனை எளிமைத்தன்மைதான். கூகுள் மக்களின் விருப்பங்களை கணித்துவிட்டால் எளிதாக பொருட்களை விற்கமுடியும் என்று எண்ணுகிறது. இதன் காரணமாக, பிற தளங்களை விட கீன் தளத்திற்கு விளம்பஙங்கள் அதிகம் கிடைக்கலாம். கூகுள் நிறுவனம், தற்போது அதை நோக்கியே செல்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்து அல்காரிதத்தையும் அமைத்துள்ளது.
ஜக்ஸாபோஸ்ட், டிசைன்பிரேசன், ஃபுட்காகர் ஆகிய வலைத்தளங்கள் பின்டிரெஸ்டைப் பின்பற்றி உருவானவை. இனி, இதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பார்ப்போம்.
financial express
கருத்துகள்
கருத்துரையிடுக