மெட்ரோ ரயில்சேவையை இரண்டு நாட்கள் போதும்! -மஞ்சு சிங், டில்லி மெட்ரோ ரயில் இயக்குநர்

 

 

 


 

 

 

 

மஞ்சு சிங், டில்லி மெட்ரோ ரயில் இயக்குநர்

மெட்ரோ ரயில் டில்லிவாசிகளுக்கு முக்கியமான போக்குவரத்து சாதனம். இதனை இயக்காமல் தாமதப்படுத்தினால் மக்கள் இந்த போக்குவரத்திலிருந்து தனியார் போக்குவரத்திற்கு மாறிவிடுவார்களே?

தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், பொதுப்போக்குவரத்து போல நிலைத்து நின்று சேவை வழங்க மாட்டார்கள். இப்போது கொரோனா காரணமாக, நாங்கள் மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தி வைத்துள்ளோம். விரைவில் நாங்கள் சேவையைத் தொடங்கும்போது மக்கள் தானாகவே எங்கள் சேவையை பயன்படுத்துவார்கள்.

பொதுமுடக்க தளர்வின்போது உள்துறை மெட்ரோ ரயில்சேவையை பயன்படுத்த கூறினால் உங்களால் சேவையை தொடங்கியிருக்க முடியுமா?

எங்கள் சேவையைத் தொடங்க அதிக நாட்கள் தேவை இல்லை. இரண்டு நாட்கள் போதும். உடனே சேவையைத் தொடங்கிவிடுவோம்.ரயில் நிலையங்களை தூய்மைபடுத்தி கிருமிநாசினி தெளிப்பது மட்டும்தான் பாக்கிப்பணி. முழுமையான சேவையைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரயிலில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்தால் போதும். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. 


மெட்ரோ ரயில் நிறுவனம் வாங்கிய கடன்தொகை எப்படி செலுத்துகிறீர்கள்?

அரசிடம் நாங்கள் 1100 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறோம். அதனை நிச்சயமாக திருப்பி செலுத்துவோம். இப்போது அரசிடம் சில விதிகளை தளர்த்த சொல்லி கேட்டிருக்கிறோம்.

பொருளாதார தாக்கம் எப்படி இருக்கிறது?

மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கியபோது அறுபது லட்சம் பயணிகள் எங்களுக்கு கிடைத்தார்கள். இதன்மூலம் தினசரி டிக்கெட் வருமானமாக 10 கோடி ரூபாய் எங்களுக்கு கிடைத்தது. 150 நாட்களுக்கு மேலாக மெட்ரோ ரயில் சேவை தடை செய்யப்பட்டு இருப்பதால் எங்களுக்கு 1500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது கடந்த ஆண்டில் மட்டும் வாடகை, குத்தகைக்கு விடுதல் ஆகிய செயல்கள் மூலமாக எங்களுக்கு 594 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட்

மொழிபெயர்ப்பு நேர்காணல்
 

கருத்துகள்