அமெரிக்க அதிபரை மத அடிப்படைவாத தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் மெய்காவலன்! - லண்டன் ஹேஸ் ஃபாலன்
லண்டன் ஹேஸ் ஃபாலன்
இயக்கம் பாபக் நஜாஃபி
இசை, டிரேவர் மோரிஸ்
ஒளிப்பதிவு எட் வைல்டு
இங்கிலாந்திற்கு இறுதிச்சடங்கு ஒன்றிற்காக உலகத் தலைவர்கள் வருகிறார்கள் அவர்களை அடிப்படைவாத தீவிரவாதிகள் போட்டுத்தள்ளுகிறார்கள். அவர்களின் முக்கியமான குறி, அமெரிக்க அதிபர்தான். அவர் அவரின் மெய்காவலர் எப்படி ஒற்றைக்கையால் காப்பாற்றி அமெரிக்க கௌரவதை தலையில் முண்டாசாக கட்டி வெல்லுகிறார் என்பதுதான் படம்.
பக்கா
நமது ஊரில் காப்பான் படம் போல, இந்த படம் அமெரிக்க காப்பான். ஜெரார்டு பட்லர் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் கூட. எனவே படத்தின் பணமும், பலமுமாக இவரே இருக்கிறார். நாடு முழுவதும் முடங்கிவிட அரசு அமைப்புகளின் உதவியின்றி தனது நாட்டு அதிபரை காப்பாற்றுகிறார். எப்படி என்பதுதான் கதை.
டொக்கு
இங்கிலாந்தில் பிற நாட்டு தலைவர்களை தீர்த்துக்கட்டுபவருக்கும், அமெரிக்காவுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை. இரண்டுபேரும் ஆயுதங்களை விற்பவர்கள் என்பதுதான். அதில் தீவிரவாதி தலைவன் செய்யும் தவறு, அமெரிக்காவின் எதிரிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்றது என சொல்லும்போது, யார் நல்லவர் கெட்டவர் என்ற கோடு அழிந்துவிடுகிறது.
இறுதியில் பாதுகாவலன் ஒருவரின் நாயகத்துவம் மட்டுமே நிற்கிறது.
சாகசம் என்ற வீரச்செயல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக