கிராம முன்னேற்றத்திற்கு உதவிய துப்பாக்கி!
கிராம முன்னேற்றத்திற்கு உதவிய துப்பாக்கி!
மத்திய பிரத்தேச மாநிலத்தைச் சேர்ந்த ரேவா மாவட்டத்தில் ஆதிவாசி குடும்பங்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. முதலில் துப்பாக்கியின் எடையால் கஷ்டப்பட்டவர்கள் இன்று, துப்பாக்கியை தங்கள் கிராமத்தை சூறையாட வரும் தடுவா எனும் சமூக விரோதிகளுக்கு எதிராக சிறப்பாக கையாள கற்றுக்கொண்டுவிட்டனர்.
ஆதிவாசி ஆண்கள் அனைவரும் இடம்பெயர் தொழிலாளர்களாக எங்கு வேலைவாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு சென்றுவிடுவார்கள். வேலை முடிந்தபிறகு, அவர்க்ள் கொண்டு வரும் பணம்தான் வீட்டுச்செலவுகளுக்கு செலவிடப்படும். இந்த நேரத்தில் ஆதிவாசிகளில் கிராமத்திற்கு வரும் த டுவா எனும் சமூக விரோதிகள் பெண்களை வல்லுறவு செய்து வீட்டிலுள்ள பசு, காளை, எருமை என அனைத்தும் கொள்ளையடித்து சென்று வந்தனர். இதில் ஒருவரை காவல்துறையே சுட்டுக்கொன்றது. அவர்தான் சிவராஜ் பாட்டீல். அவர் இறந்தாலும் இந்த கிராமத்தினருக்கு பிரச்னை தீரவில்லை. எனவே துப்பாக்கிகளை சுட பயிற்சி எடுத்து இப்போது கிராமத்தை பாதுகாப்பாக சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கிகள் கிடைத்தபிறகு கிராமங்கள் அமைதியாக இருக்கிறது.
துப்பாக்கி இன்னொரு கலாசார மாற்றத்தையும் இங்கு ஏற்படுத்தியுள்ளது. முதலில் பெண்கள் வேறு ஆட்களை பார்க்கவே கூச்சப்படுவார்கள். முகத்திரையை களைய மாட்டார்கள். இன்று வெகுதொலைவு என்றாலும் கிராமத்தில் விளையும் மரங்களை சென்று சந்தையில் விற்கவும் தயங்குவதில்லை. இதனால் பெண்கள் ஆண்களை மட்டுமே வருமானத்திற்கு நம்பியிருக்கும் நிலை இல்லாமல் போயிருக்கிறது. 2004ஆம் ஆண்டு இவர்களின் கிராமத்திற்கு வந்த முதல் வரிடம் கோரிக்கை விடுத்து துப்பாக்கிகளை பெண்கள் கொடுத்துள்ளனர். இதற்கான இயக்கம் முழுவதையும் பெண்கள் தாங்களே கற்றுள்ளனர்.
தி இந்து ஆங்கிலம்
சித்தார்த் யாதவ்
கருத்துகள்
கருத்துரையிடுக